மாவட்டங்கள்

img

தேர்வு நிலை சிறப்பு நிலை வழங்கப்படாமல் ஆண்டுக்கணக்கில் கிடப்பில் போட்டுவதா?

கரூர், ஆக.23- தேர்வு நிலை சிறப்பு நிலை வழங்கப்படாமல் ஆண்டுக்கணக்கில் கிடப்பில் போட்ட கரூர் மாவட்ட கல்வி அலுவலர்களை கண்டித்து தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாவட்டக் குழு சார்பில் கரூர் மாவட்ட கல்வி அலுவலர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டத் தலைவர் காளிதாஸ் தலைமை வகித்தார். மாநிலத் தலைவர் மோசஸ், தமிழ்நாடு கல்வித்துறை நிர்வாக அலுவலர் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் பொன்ஜெயராம் ஆகியோர் சிறப்புரையாற்றினர். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் சக்திவேல், ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் மாவட்ட செயலாளர் ஜெயராஜ் மற்றும் பல்வேறு தோழமை சங்க மாவட்ட தலைவர்கள் மலைகொழுந்தன், நித்தியானந்தன், வட்டார செயலாளர்கள்  மோகன், பிரான்சிஸ் டேனியல் ராஜா, பாலமுருகன், ஜான்சன்,  சுரேஷ்குமார் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். வட்டார தலைவர் அருள்குழந்தை தேவதாஸ் நன்றி கூறினார்.

;