மாவட்டங்கள்

img

புதுச்சேரிக்கு தண்ணீர் கடத்தல்

தரங்கம்பாடி, ஜூலை 19- தரங்கம்பாடி வட்டம் காழியப்பநல்லூர் ஊராட்சி என்.என்.சாவடியில் தனிநபர் ஒருவரால் பம்புசெட்டு மூலம் நிலத்தடி நீர் உறிஞ்சப்பட்டு நாள்தோறும் பல லட்சம் லிட்டர் தண்ணீரை புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மற்றும் பல்வேறு பகுதிகளுக்கு டேங்கர் லாரிகள் மூலம் கடத்தப்படுவதால் அப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து வருகிறது. இதுகுறித்து பலமுறை மாவட்ட நிர்வாகத்திடம் முறையிட்டும் முறையான நடவடிக்கை இல்லையென அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். நாகை மாவட்டம் தரங்கம்பாடி வட்டம் காழியப்ப நல்லூர் ஊராட்சி என்.என்.சாவடி, அம்பேத்கார் நகர் எதிர்புறம், தனியாருக்கு சொந்தமான நிலத்தில் விவசாயம் செய்வதாக இலவச மின்சாரம் பெற்றுக் கொண்டு 3 பம்பு செட்டுகள் அமைத்து கடந்த சில வருடங்களாக டேங்கர் லாரிகள் மூலம் நிலத்தடி நீரை உறிஞ்சி விற்பனை செய்து வரப்படுகிறது. இது குறித்து பல முறை மாவட்ட ஆட்சி யர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் முறையிட்டும் எந்தவித நட வடிக்கையும் இல்லையென பொதுமக்கள் மற்றும் வாலிபர் சங்க வட்டச் செயலாளர் கே.பி.மார்க்ஸ் கூறுகின்றனர்.  ஏற்கனவே காழியப்பநல்லூர் பகுதியில் மணல் குவாரி கள் அமைக்கப்பட்டதால் நிலத்தடி நீர் மட்டம் குறைந்து விவசாயம் கேள்விக் குறியாகி வருகிறது. பொதுமக்க ளுக்கு தேவையான குடிநீரை ஊராட்சி நிர்வாகம் முறை யாக வழங்க முடியாத சூழல் உள்ள நிலையிலும் கடுமை யான குடிநீர் தட்டுப்பாடு தாலுகா முழுவதும் நிலவும் சூழ லில் தனிநபர் ஒருவர் அன்றாடம் தண்ணீர் திருட்டில் ஈடுபடு வது மக்களை பெரிதும் அவதிக்குள்ளாகி வருகிறது. கடந்த ஆண்டு சம்பந்தப்பட்ட அதே நபர் மீது வட்டார வளர்ச்சி அலுவலர் நடவடிக்கை எடுத்தார்.  சட்ட விரோதமாக தண்ணீர் திருட்டில் ஈடுபடுவது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கவில்லையெனில் வாலி பர் சங்கம் சார்பில் மக்களை திரட்டு போராட்டம் நடத்தப் படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

;