மாவட்டங்கள்

சீர்காழி ,தஞ்சாவூர் முக்கிய செய்திகள்

சீர்காழி பகுதியில் கனமழை 

சீர்காழி ஜூலை 19- நாகை மாவட்டம் சீர்காழி- கொள்ளிடம் மற்றும் சுற்று வட்டாரப் பகுதியில் திடீரென மேகமூட்டம் திரண்டு இருளத் தொடங்கி தொடர்ந்து பலத்த காற்று இடியுடன் மழை பெய்தது. சுமார் 1 மணி நேரம் மிதமாக ஆரம்பித்து கனமழை பெய்தது. இதனால் மழை நீர் கொள்ளிடம் கடைவீதியில் பெருக்கெடுத்து ஓடியது.  கடந்த சில மாதங்களில் மழையில்லாமல் வறண்ட தட்ப வெப்பநிலை நிலவி வந்தது. இந்நிலையில் பெய்த மழை வெப்பத்தை தனிப்பதாக அமைந்தது. மழையினால் விவசாயிகள் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி யடைந்தனர். மேலும் மழையினால் கொள்ளிடம் ஆற்றின் கரையோரம் உள்ள செங்கல் சூளைகள் பாதிப்படைந் தன. கொள்ளிடம் பகுதியில் வியாழன் அன்று மாலை பெய்த மழையின் அளவு 37.6 மி.மீ பதிவானது.

ஏரி தூர்வாரும் பணியை முழுமையாக மேற்கொள்க!

த.வி.ச கோரிக்கை 

தஞ்சாவூர், ஜூலை 19- விவசாயிகள் குறைதீர் கூட்டம் வெள்ளிக்கிழமை அன்று தஞ்சாவூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் கோட்டாட்சி யர் சி.சுரேஷ் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க தஞ்சை மாவட்ட செயலா ளர் என்.வி.கண்ணன் பேசுகையில், “கண்ணனாறு வல்லம் தொடங்கி மதுக்கூர் அருகே உள்ள அண்டமி வரை உள்ள முக்கிய வடிகால் வாய்க்காலாகும். இதில் தூர்வாரும் பணி முறையாக நடக்கவில்லை.  இதே போல வேதபுரி ஆற்றிலும் தூர்வாரும் பணி சரி வர நடக்கவில்லை. உய்யக்கொண்டான் நீட்டிப்பு வாய்க்கால் மற்றும் அதனைச் சார்ந்த பாசன ஏரிகளில் கடந்த ஆண்டு தூர்வாரும் பணி தொடங்கிய நிலையில், தண்ணீர் வந்ததால் பணிகள் பாதியிலேயே நின்று போனது. அவற்றை மீண்டும் தொடங்கி பணிகளை நிறைவு செய்ய வேண்டும். தடுப்பு சுவர், படிக்கட்டுகள், குமிழ்களை அமைக்க வேண்டும். தூர்வாரும் பணி வெறும் கண்துடைப் பாக நடைபெறுகிறது. இதில் ஊழல் முறைகேடு இன்றி வெளிப்படையாகவும், விவசாயிகளுக்கு பயன்தரும் வகை யிலும் நடைபெறுவதை அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும்.  கடந்த சில மாதங்களுக்கு முன்பு வேளாண்மை துறை சார்பில் கஜா புயல் பாதித்த பேராவூரணி, பட்டுக் கோட்டை, ஒரத்தநாடு பகுதி விவசாயிகளுக்கு வழங்கப் பட்ட உளுந்து விதை பலன் தரவில்லை. இதனா‌ல் பாதிக் கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும். பூதலூர் தாலுகா வெண்டையம்பட்டி ஊராட்சியில் நவ லூர், கணேசபுரம் பகுதியில் கடுமையான குடிநீர் தட்டுப் பாடு ஏற்பட்டுள்ளது. எனவே அங்கு குடிநீர் வசதி செய்து தரவேண்டும்” என வலியுறுத்தினார்.  இதே போல் கஜா புயலின் போது வாய்க்கால்களில் விழுந்த மரங்களை அகற்ற வேண்டும். விவசாயத்திற்கு தடையில்லா மின்சாரம் வழங்க வேண்டும். குறுவை தொகுப்புத் திட்டத்தை மீண்டும் அறிவிக்க வேண்டும். சம்பா சாகுபடிக்கு தேவையான விதை நெல்லை இருப்பு வைக்க வேண்டும். மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறி வித்து இழப்பீடு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தி விவசாயிகள் பேசினர். 
 

தஞ்சையில் இன்று மின்தடை

தஞ்சாவூர், ஜூலை 19- தஞ்சாவூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஜூலை 20-ம் தேதி மின் விநியோகம் இருக்காது. மருத்துவக் கல்லூரி சாலையில் உள்ள துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுகிறது. இதனால் ஈஸ்வரி நகர், முனிசிபல் காலனி, புதிய பேருந்து நிலையம், புதிய வீட்டு வசதி வாரிய குடியிருப்பு, காவேரி நகர், எலிசா நகர், கள்ளப்பெரம்பூர், நாஞ்சிக்கோட்டை சாலை, நூற் பாலை, சிட்கோ, மாதாக் கோட்டை பகுதிகள். வல்லம், தமிழ் பல்கலைக்கழகம், தஞ்சாவூர் ரோவர் பிளவர் மில், வஸ்தாசாவடி, பிள்ளையார்பட்டி, மொன்னை யம் பட்டி, ஆலங்குடி, திருமலை சமுத்திரம், சக்கர சாமந்தம், கரிமேடு, மானோஜிப்பட்டி மற்றும் அவற்றைச் சுற்றியுள்ள பகுதிகளில் காலை 9 முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது என மின் உதவி செயற்பொறியாளர் எஸ்.பஞ்சநாதன் தெரிவித்துள்ளார்.

;