மாவட்டங்கள்

img

மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி உறவினர்கள் சாலை மறியல்

கும்பகோணம் ஜூலை 11- கும்பகோணத்தை அடுத்த அண்டக்குடையான் கிராமத்தை சேர்ந்தவர் சாமிநாதன் மகன் முருகே சன்(55). இவர் உப்புக் கார தெருவில் மோட்டார் ரீவைண்டிங் வைத்துள்ளார். இவருக்கு சுமதி என்ற மனைவியும், கூலி வேலை செய்கிறார். நவீன்ராஜ் என்ற மகனும், கல்லூரி படிக்கும் அபிநயா என்ற மகளும் உள்ளனர். இந்நிலையில் முருகேசன், புதன் காலை 12 மணியளவில்  கம்பட்டவிஸ்வ நாதர் கோயில் கீழ வீதியுள்ள கோவிந்த சாமி என்பவரது பட்டறையிலுள்ள மோட்டார் பழுதானதால் அதனை ரிப்பேர் செய்ய வந்தார்.  அப்போது மெயின் ஸ்வீட்சை அணைத்து விட்டு, பட்டறையிலுள்ள மோட்டாரை சீர் செய்த போது பட்ட றைக்கு வந்த நபர் மெயின் ஸ்வீட்சை ஆன் செய்ததாக கூறப்படுகிறது இத னால் முருகேசன் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பலியானார். பின் னர் இது குறித்து பட்டறையின் உரிமை யாளர் கோவிந்தசாமி யாரிடமும் தக வல் அளிக்காமல் இருந்துள்ளார். இந் நிலையில் முருகேசனின் மகள் அபி நயா, தன்னை அழைக்க தந்தை வராத தால், இது குறித்து வீட்டிற்கு தகவல் கொடுத்தார். பின்னர் வீட்டிலுள்ள மகன் நவீன் ராஜ் மற்றும் உறவினர்கள், கடையில் வந்து விசாரணை செய்து விட்டு, கோவிந்தசாமி பட்டறையில் வந்து பார்த்த போது, மின்சாரம் தாக்கி இறந் துள்ளது தெரியவந்தது. இதனால் ஆத்திரமடைந்த உறவினர்கள், முரு கேசனை, மின்சாரம் பாய்ச்சி கொலை செய்துள்ளார்கள் என்றும், மதியம் 12 மணியளவில் இறந்த முருகேசனை காவல்துறையின் இடமிருந்து மறைத் தது ஏன் என்றும், மாலை 4 மணி வரை காவல்துறை சம்பவ இடத்திற்கு வரா ததை கண்டித்து கும்பகோணம் தஞ்சை சாலை மௌனசாமி மடம் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த காவல் துணை கண்காணிப்பாளர் ஜெயச்சந்திரன், போராட்டக்கார்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி, விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உத்தரவாதம் அளித்ததின் பேரில் போராட்டம் வாபஸ் பெற்றது.

;