மாவட்டங்கள்

img

ரயில்வே துறையை தனியாருக்கு கொடுப்பதை கண்டித்து பொன்மலையில் ஆர்ப்பாட்டம்

திருச்சிராப்பள்ளி, ஜூலை 19- ரயில்வேயை தனியாருக்கு கொடுக்கும் 100 நாள் ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும். அரசு பொதுத் துறை நிறுவனங்களில் ரயில்வே சம் பந்தமான ரயில்கள் மற்றும் பெட்டிகள் உற்பத்தி செய்வதற்கு பதிலாக தனி யார் நிறுவனங்களிடமிருந்து ரெடிமேட் ரயில்களை வாங்கும் திட்டத்தை கைவிட வேண்டும். 55 வயது அல்லது 30 ஆண்டு பணி முடிந்து இருந்தால் பணி தகுதி அடிப்படையில் கட்டாய ஓய்வு திட்டத்தை கைவிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலி யுறுத்தி தட்சிண ரயில்வே எம்ப்ளாயீஸ் யூனியன் பொன்மலை கிளைகள் சார் பில் வியாழனன்று பொன்மலை ஆர்மரி கேட் முன் கண்டன ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு கோட்ட உதவி செயலாளர் லெனின் தலைமை வகித் தார். ஆர்ப்பாட்டத்தை விளக்கி  ஒர்க்க்ஷாப் டிவிசன் கோட்ட தலைவர் மகேந்திரன், உதவி பொதுச்செயலா ளர் மனோகரன், மண்டல உதவி தலை வர் சாம்பசிவம் ஆகியோர் பேசினர். டிவிசன் நிர்வாகிகள் சங்கர், ஜெக நாதன் மற்றும் கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கோட்ட உதவி தலைவர் கருப்பசாமி நன்றி கூறினார்.

;