திங்கள், ஆகஸ்ட் 3, 2020

மாவட்டங்கள்

img

ரயில்வே துறையை தனியாருக்கு தாரைவார்க்காதே! மத்திய அரசை கண்டித்து வாலிபர் சங்கம் தர்ணா

திருச்சிராப்பள்ளி, ஜூலை 15-  ரயில்வே துறையை தனியா ருக்கு தாரைவார்க்கும் மத்திய அரசை கண்டித்து இந்திய ஜனநாயக வாலி பர் சங்கம் சார்பில் புதனன்று மாநிலம்  முழுவதும் தர்ணா போராட்டம் நடை பெற்றது.
திருச்சிராப்பள்ளி
திருச்சி ரயில்வே ஜங்சன் முன்பு மாநகர் மாவட்டச் செயலாளர் லெனின் தலைமை வகித்தார்.  மணப்பாறை ரயில்வே நிலையம் முன் வாலிபர் சங்க புறநகர் மாவட்ட தலைவர் பாலு தலைமை வகித்தார். 
நாகப்பட்டினம்
நாகப்பட்டினம், கீழ்வேளூர், கீழையூர், தலைஞாயிறு, வேதரணியம் ஆகிய வாலிபர் சங்க ஒன்றியக் குழுக்கள் சார்பில் நடைபெற்ற தொடர் முழக்கப் போராட்டத்திற்கு சங்கத்தின் மாவட்டத் தலைவர் ஏ.சிவக்குமார் தலைமை வகித்து விளக்கவுரையாற்றினார்.
தரங்கம்பாடி
மயிலாடுதுறை ஜங்ஷனில் மாவட்ட செயலாளர் ஏ.வி.சிங்கார வேலன், மாவட்ட துணைத்தலைவர் கே.பி.மார்க்ஸ், மாவட்ட துணைச் செயலாளர் ஏ.அறிவழகன், மாவட்ட க்குழு உறுப்பினர்கள் வீ.எம்.சர வணன், ஸ்டாலின், பிரகாஷ், சுர்ஜித்,  விஜயபாலன் ஆகியோர் உரையாற்றி னர். போராட்டத்தை வாழ்த்தி சிஐடியு மாவட்ட பொருளாளர் ஆர்.ரவீந்தி ரன், மாணவர் சங்க மாநிலத் தலை வர் மாரியப்பன் ஆகியோர் வாழ்த்தி  பேசினர். மயிலாடுதுறை, சீர்காழி, தரங்க ம்பாடி, குத்தாலம் பகுதிகளைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட வாலி பர்கள் கண்டன முழக்கமிட்டனர்.
குடவாசல்
திருவாரூர் மாவட்டம் நீடாமங்க லம் ஒன்றியம் கடைவீதியில் உள்ள பெரியார் சிலை அருகே ஒன்றிய தலைவர் டி.பி.கிஷோர் குமார் தலைமை வகித்தார். குடவாசல் வி.பி.சிந்தன் பேருந்து நிலையம் அருகே ஒன்றிய செயலாளர் கே.பகத்சிங் தலைமை வகித்தார்.

;