மாவட்டங்கள்

img

மோட்டார் வாகனச் சட்டத் திருத்தத்தை திரும்பப் பெறக் கோரி ஆர்ப்பாட்டம்

திருச்சிராப்பள்ளி, ஆக.25- அனைத்து வாகன ஓட்டுனர்கள், இருசக்கர பழுது பார்ப்போர், உதிரி பாகங்கள் விற்பனை செய்வோர், ஓட்டுநர் பயிற்சிப் பள்ளி, அரசு போக்குவரத்து போன்றவற்றில் பணி புரிவோரின் வாழ்வாதாரத்தை பறிக்கிற மோட்டார் வாகன சட்டத் திருத்தத்தை திரும்பப் பெற வலியுறுத்தி சாலை போக்குவரத்து தொழிலாளர் சங்கம் சிஐடியு சார்பில் திருச்சி ராமகிருஷ்ணா மேம்பாலம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  ஆர்ப்பாட்டத்திற்கு சாலை போக்குவரத்து தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் வீரமுத்து தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தை விளக்கி சிஐடியு மாவட்ட செயலாளர் ரெங்கராஜன், இருசக்கர வாகன பழுது நீக்குவோர் சங்க மாநில தலைவர் சண்முகம், அரசு போக்குவரத்து கழக ஊழியர் சங்க சீனிவாசன், ஆட்டோ ரிக்க்ஷா ஓட்டுனர் சங்க மாவட்ட செயலாளர் மணிகண்டன் ஆகியோர் பேசினர். ஆர்ப்பாட்டத்தில் சாலை போக்குவரத்து தொழிலாளர் சங்க தலைவர் சந்திரன், துணைத்தலைவர் செல்வம், மாவட்ட துணை செயலாளர் வரிசைமுகமது, அரசு போக்குவரத்து கழக ஊழியர் சங்க செயலாளர் கருணாநிதி, சிஐடியு மாவட்ட தலைவர் ராமர், மாவட்ட பொருளாளர் வி.கே.ராஜேந்திரன், இருசக்கர வாகன பழுது நீக்குவோர் சங்க ரகுராமன், பாலசுப்ரமணியன், தனியார் பேருந்து தொழிலாளர் சங்க செல்வம், செந்தில் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.  இதே போன்று திருச்சி புறநகர் மாவட்ட சிஐடியு சார்பில் நம்பர் 1 டோல்கேட் பகுதியில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு ஆட்டோ ஊழியர் சங்க மாவட்ட பொருளாளர் சந்திரசேகர் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தை விளக்கி ஆட்டோ சங்க மாவட்ட செயலாளர் சம்பத், சிஐடியு மாவட்ட தலைவர் பன்னீர்செல்வம், செயலாளர் சிவராஜ், போக்குவரத்து சங்க சண்முகம், ஆட்டோ சங்க தலைவர் நவமணி, கட்டுமான சங்க மாவட்ட செயலாளர் பூமாலை, சிபிஎம் மண்ணச்சநல்லூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் கனகராஜ் ஆகியோர் பேசினர். தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் அருகில் விரைவு போக்குவரத்து கழக பணிமனை முன்பாக சனிக்கிழமை மாலை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சிஐடியு அரசு போக்குவரத்து கழக தொழிற்சங்க தலைவர் பி.முருகன் தலைமை வகித்தார். சிஐடியு மாவட்ட செயலாளர் சி.ஜெயபால் கண்டன உரையாற்றினார்.  சிஐடியு மாவட்ட துணைச் செயலாளர்கள் கே.அன்பு, சா.செங்குட்டுவன், துணைத் தலைவர் பி.வெங்கடேசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநகரச் செயலாளர் என்.குருசாமி, டாஸ்மாக் பணியாளர் சங்க மாவட்ட செயலாளர் கே.வீரையன், டூரிஸ்ட் டிராவல்ஸ் சங்க துணைத்தலைவர் துரை.பாண்டியன், பொருளாளர் முருகன், பாபு, ஓட்டுநர் பயிற்சிப் பள்ளி நிர்வாகி தியாகராஜன், இருசக்கர வாகன பழுது பார்ப்போர் சங்க மோகன், சக்கரவர்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.  திருவாரூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சிஐடியு சங்க மாவட்ட துணைச் செயலாளர் எம்.கே.என்.அனிபா தலைமையேற்றார். சா.போ.தொ.சங்க மாவட்ட செயலாளர் ஏ.ஒன்.மணி, த.நா.மோ.வா.ப நலச் சங்க தலைவர் கே.பழனிவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிஐடியு மாவட்ட செயலாளர் டி.முருகையன், மாவட்ட துணைத்தலைவர் ஜி.பழனிவேல் ஆகியோர் கண்டன உரையாற்றினர். 

;