மாவட்டங்கள்

img

சிட்டி யூனியன் வங்கி சார்பில் கனிணிகள் வழங்கல்

மன்னார்குடி: குடந்தை அரசு மருத்துவமனைக்கு சிட்டி யூனியன் வங்கி சார்பில் ரூ.6 லட்சம் மதிப்பிலான 22 கம்ப்யூட்டர்கள், 2 கலர் பிரிண்டர்களை வழங்கும் நிகழ்ச்சி குடந்தை அரசு மருத்துவமனையில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு டாக்டர் கமரூல் ஜமான் தலைமை வகித்து வரவேற்றார். வங்கி தலைமை திட்ட அலுவலர் பாலசுப்பிரமணியன் எம்எல்ஏ க.அன்பழ கன் எம்.எல்.ஏஆகியோர் வழங்கினர்.  அப்போது பாலசுப்பிரமணியன் பேசுகையில், சி.யூபி சார்பில் சமுதாய பங்களிப்பு திட்டத்தின் கீழ் சமூக நலத் திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்களில் கல்வி, சுகாதாரம், மருத்துவம், மாசு கட்டுப்பாடு, நீர் நிலை ஆதாரங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து பணிகளை செய்து கொடுத்துள்ளோம். குறிப்பாக எதிர்கால சந்தி யினருக்கு குடிநீர் தேவையை கருத்தில் கொண்டு குளம், ஏரிகள் தூர்வாரப்பட்டுள்ளன. கடந்த 2014 முதல் 2019 ஆம் ஆண்டு வரையிலான 5 ஆண்டுகளில் இத்தகைய பணிகள் ரூ.52 கோடி மதிப்பில் செய்யப்பட்டுள்ளது என்றார். சுகாதார  பணிகள் இணை இயக்குநர் காந்தி ஆகியோர் பேசினர். ஆர்.எம்.ஓ. பிரபாகர் நன்றி கூறினார். 

;