ஞாயிறு, ஆகஸ்ட் 9, 2020

மாவட்டங்கள்

img

தேசிய வாலிபால் போட்டி சாதனை மாணவிக்கு பாராட்டு

தஞ்சாவூர், மே 7-தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணியை அடுத்த நாடாகாடு முனிக்கோயில் பாலம் பகுதியை சேர்ந்தவர் நீலகண்டன்-சரஸ்வதி தம்பதி. இவர்களது மகள் என்.நிஷா(14). 10-ஆம் வகுப்பு மாணவி. மகாராஷ்டிர மாநிலம் கோபர்கான் ஷீரடியில் நடைபெற்ற மினி நேஷனல் வாலிபால் சாம்பியன்ஷிப் போட்டியில் 30-க்கும் மேற்பட்ட அணிகள் கலந்து கொண்டன. இதில் தமிழக அணி இரண்டாம் இடத்தைப் பெற்று வெள்ளிப் பதக்கத்தை வென்றது. இந்த அணியில் வீராங்கனை என்.நிஷா, துணைக் கேப்டனாக அபாரமாக விளையாடினார். ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்த கிராமப்புற மாணவியான என்.நிஷா தன்னுடைய வறுமையான சூழலிலும் போராடி தேசிய அளவில் இரண்டாம் இடம் பெற்றதை பாராட்டி திங்கள்கிழமை மாலை இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் மாவட்டச் செயலாளர் கே.அருளரன், மாவட்டத் தலைவர் ஆம்பல் துரை.ஏசுராஜா, பட்டுக்கோட்டை ஒன்றியச் செயலாளர் மோரிஸ் அண்ணாதுரை, மருங்கப்பள்ளம் சுரேஷ் ஆகியோர் நாடாகாடு மாணவியின் வீடு சென்று மாணவி என்.நிஷா, பயிற்சியாளர் பாரதிதாசன், நீலகண்டன் மற்றும் பெற்றோர்கள் நீலகண்டன்-சரஸ்வதி ஆகியோருக்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர். 

;