மாவட்டங்கள்

img

ஐஐடி மாணவி மரணத்திற்கு நீதி கேட்டு ஆர்ப்பாட்டம்

கும்பகோணம், நவ.16- சென்னை ஐஐடி மாணவி பாத்திமா லத்தீப் மரணத்திற்கு நீதி கேட்டும் மாணவியின் மர ணத்திற்கு காரணமான சுதர்சன் பத்மநாதனை கைது செய்ய வலியுறுத்தியும் உயர்கல்வி நிலையங்களில் காவி மையத்தை புகுத்தும் மத்திய அரசை கண்டித்து இந்திய மாணவர் சங்கம் சார்பில் கும்பகோணம் காந்தி பார்க் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாநில செயற்குழு உறுப்பினர் காவியா தலைமை ஏற்றார். மாநில செயலாளர் வி.மாரியப்பன், மாநில தலைவர் கண்ணன், மத்தியகுழு ஜான்சி, மாவட்ட செய லாளர் அரவிந்த்சாமி, மாவட்ட தலைவர் பாலகுரு மாவட்ட குழு வீரையன் நகர தலைவர் பிரபாகரன் உள்ளிட்டோர் கண்டன உரை ஆற்றினர், ஆர்ப்பாட்டத்தில் இந்திய மாணவர்கள் சங்கத்தினர் ஏராளமானோர் கலந்து கொண்டு கண்டன முழக்கமிட்டனர்.

;