மாவட்டங்கள்

ஏழைகளுக்கு உதவி வழங்கல்

தஞ்சாவூர், மே 23- தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணியில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில், நலிவடைந்த இஸ்லாமியர்களுக்கு ஃபித்ரா எனப்படும் நோன்பு பெருநாள் தர்மம் வழங்கப்பட்டது. பூக்கொல்லை, நாட்டாணிக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வசிக்கும், நலிவடைந்த 135 இஸ்லாமிய குடும்பங்களுக்கு, டிஎன்டிஜே ஏற்பாட்டில் அரிசி, மளிகை உள்ளிட்ட ரூ 360 மதிப்பிலான பொருட்கள் வழங்கப்பட்டன. கிளைத் தலைவர் பஷீர் அலி தலைமையில், செயலாளர் பர்வேஸ், பொருளாளர் முகமது இலியாஸ், நிர்வாகிகள் அயூப்கான், சேக் அப்துல்லா, சாதிக் அலி ஆகியோர் வீடு தேடிச் சென்று வழங்கினர். 

;