ஞாயிறு, ஆகஸ்ட் 9, 2020

மாவட்டங்கள்

img

சிபிஐ மற்றும் அமலாக்கத்துறையை சுயலாபத்திற்காக பயன்படுத்தும் மத்திய அரசு தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் பேட்டி

சேலம், செப்.5- சிபிஐ மற்றும் அமலாக் கத்துறையை மத்திய அரசு தனது சுயலாபத்திற்கு பயன்படுத்துவதாக தமிழக வாழ்வுரிமை கட்சித் தலை வர் வேல்முருகன் குற்றஞ் சாட்டியுள்ளார். இதுதொடர்பாக, சேலத்தில் செய்தியாளர் களை சந்தித்த வேல்முருகன் கூறுகையில், மத்திய மோடி அரசு தனது சர்வாதிகார போக்கை கையாண்டு வரு கிறது. குறிப்பாக அரசி யலில் தங்களை யாரும்  எதிர்த்து விடக் கூடாது.  அப்படி எதிர்ப்பவர்களை  சிபிஐ மற்றும் அமலாக்கத்துறையை  வைத்து தங்களுடைய சுய லாபத்திற்காக பயன்படுத்தி வருகிறது. இதனை தமிழக வாழ்வுரிமைக் கட்சி வன்மையாக கண்டிக்கிறது என்றார். மேலும் முதல்வர்  தமிழகத்தில் ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ்  சேவையை அறிமுகப்படுத்த ஆய்வு மேற் கொள்ள வெளிநாடு சென்றுள்ளார். முதலில் தமிழகத்தில் 12 ஆயிரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் போது மான மருத்துவர்கள், செவிலியர்கள் இல்லை. இவர்கள் நடத்திய மருத்துவ நுழைவுத் தேர்வில் வெற்றி பெற்று பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் காத்திருப்பில் உள்ளனர்.  மேலும் நீட் மற்றும் டெட் உள்ளிட்ட தேர்வில் வெற்றி பெற்றும் கூட பணி வாய்ப்பு வழங்காமல் உள்ளனர். அரசு மருத்துவர் பணிக்கு 10 லட்சம் ரூபாய் கொடுத்தால் மட்டுமே பணி நியமன ஆணையை வழங்கி வருகிறது. மேலும் முறையாக தேர்வு எழுதியவர்களை பணியில் நியமிக்காமல் வெளிநாட்டு பயணம் என்பது சிறப்பு வாய்ந்தது அல்ல.  முதலில் தமிழகத்தில் காலியாக உள்ள அனைத்து மருத்துவர்கள் மற்றும் செவி லியர்கள் பணியிடங்களை நிரப்ப வேண்டும்  என்றார். மேலும் மத்திய அரசு ஒரே நாடு, ஒரே  மொழி, ஒரே கலாச்சாரம், ஒரே குடும்ப  அட்டை என்ற நடைமுறைக்கு சாத்திய மில்லாத பல்வேறு திட்டங்களை சர்வாதி காரப் போக்கை கொண்டு திணிக்கிறது. இது போன்ற கொள்கைகளை மத்திய அரசு  உடனடியாக கைவிட வேண்டும் என தெரிவித்தார். 

;