மாவட்டங்கள்

img

சேதமான சாலைகளை சீரமைக்க கோரிக்கை

திருவாரூர், நவ.8- திருவாரூர் நகராட்சி சாலைகள் பழுது அடைந்தும், சாலைகளில் திரி யும் ஆடு, மாடு மற்றும் நாய் தொல்லை யால் விபத்து ஏற்படுவதும், இதனால் வாகன ஒட்டிகள், பொதுமக்கள் விபத்தில் சிக்கி உயிர் இழக்கும் அவல நிலையை தடுத்து நிறுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நவ.8 அன்று பொதுநல இயக்கம் மற்றும் நுகர்வோர் மையம் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பட்டம் அறிவிக்கபட்டது. இதை தொடந்து திருவாரூர் கோட்டாட்சியர் வழிகாட்டல் படி திரு வாரூர் நகராட்சி ஆணையர் தலை மையில் அமைதி பேச்சுவார்த்தை 7-ம் தேதி நடைபெற்ற பேச்சுவார்த்தையில், டிசம்பர் 15-ம் தேதிக்கு பிறகு பழுது அடைந்த சாலைகள் சீர் அமைக்கப் படும். முக்கிய சாலைக்கான பணிக ளுக்கு ஒப்பந்தம் விடப்பட்டு உள்ள தாகவும், அதன்படி மழைகாலம் முடிந்த உடன் பணிகள் துவங்கப்படும் உள்ளிட்டவை உறுதி அளித்ததால் போராட்டம் டிசம்பர் 20 ம் தேதி வரை ஒத்தி  வைக்கப்படுவதாக அறிவித்தனர்.  கூட்டத்தில் நுகர்வோர் மையத்தின் பெருந்தலைவர் முனைவர் எஸ்.டி. அண்ணாதுரை, பொதுச்செயலாளர் சு.ரமேஷ், பொருளாளர் நாகராஜன், வர்த்தக சங்கத் தலைவர் பால முருகன், செயலாளர் குமரேசன் ஹோட்டல் உரிமையாளர் சங்க செய லாளர் கலியமூர்த்தி, நுகர்வோர் மையத்தின் துணைத்தலைவர் ஆழ கிரிசாமி, இயக்குனர் ஊ.செல்வ குமார் மற்றும் ஆலோசகர்கள் அருள், சீனிவாசன் மாநில ஒருங்கிணைப் பாளர் க.திருநாவுக்கரசு, செயற்குழு உறுப்பினர் மண்ணையதேவன், காப்பீட்டு கழக ஊழியர் சங்க தலை வர் தெஷ்ணாமூர்த்தி, தொழிற்சங்க கூட்டமைப்பு தர்மதாஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

;