மாவட்டங்கள்

img

சிறு குறு நிறுவனங்களுக்கு வட்டியில்லாக் கடன் தொழில் முனைவோர் அரசுக்கு கோரிக்கை

சென்னை, மே 28- சிறு குறு நிறுவனங்களை பாதுகாக்க வட்டி யில்லா கடன் வழங்க வேண்டும் என்று சிறு  குறு தொழில் முனைவோர் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழகம் முழுவதும் ஒரு கோடியே 4  லட்சம் சிறு, குறு தொழிற்சாலைகள் உள்ளன.  இதில் சுமார் 3.5 கோடி பேருக்கு மேல்  வேலை செய்கின்றனர். சென்னை, திருவள்  ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் உள்ள சுமார் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட சிறு,  குறு தொழிற்சாலைகளில் சுமார் 3 லட்சத்திற்கும் மேற்பட்டோர் வேலை செய்கின்றனர்.  பொருளாதார மந்த நிலையாலும், நாடு தழுவிய பொதுமுடக்கத்தாலும் இத்தகைய சிறு குறு நிறுவனங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் சிறு குறு நிறுவன சங்கங்களின் ஆலோசனைக் கூட்டம்  வியாழனன்று (மே 28) அம்பத்தூர் தொழிற்பேட்டையில் நடைபெற்றது.

இந்தக்கூட்டத்தில், தமிழ்நாடு சிறு மற்றும்  குறு தொழில் முனைவோர் சங்கத்தின் தலைவர் கே.கிருஷ்ணசாமி, செயலாளர் பி.ஜி.கே.ரமேஷ், அத்திப்பட்டு தொழில் முனைவோர் சங்கத்தின் தலைவர் சாம்,  செயலாளர் ராமேஷ், ரவீந்திரன், கல்யாணி இண்டஸ்ட்ரியல் எஸ்டேட் சங்கத்தின் தலை வர் பி.ஜகன்நாதன், இ.சி.எம்.முருகன், தமிழ்நாடு புரட்சிகர தொழில் முனைவோர் சங்கத்தின் தலைவர் ஜனார்தனன், செய லாளர் சுப்புராயன், வி.பி.கணேஷ்குமார், டாஸ்  எஸ்டேட் சங்கத்தின் தலைவர் சி.சண்முகம், பொருளாளர் இளங்கோ, தென்சென்னை இன்டஸ்டிரியல் அசோசியேஷன் (போரூர்) தலைவர் சுந்தர் சுப்பிரமணியன், செயலாளர் சிவக்குமார், மோகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்தக்கூட்டத்தில், சிறு குறு தொழில் களை பாதுகாக்கும் வகையில் ஒரு லட்சம் ரூபாய் முதல் 10 லட்சம் ரூபாய் வரை வட்டி யில்லா கடன் வழங்க வேண்டும், மார்ச் - மே  ஆகிய 3 மாதகால மின்சார கட்டணத்தை  ரத்து செய்ய வேண்டும், இயந்திரங்க ளுக்காக வாங்கிய கடனையும், வட்டியையும்  மோனிட்டோரியம் பீரியடு ஒரு ஆண்டு கழித்து பிடித்தம் செய்ய வேண்டும். பொருளை விற்ற 20 நாட்களுக்குள் தற்போது ஜிஎஸ்டி கட்ட வேண்டியுள்ளதால், பொருள் வாங்குவதற்கான பெறும் கட னுக்கான வட்டியை ஒராண்டு காலத்திற்கு 6 விழுக்காடாக குறைக்க வேண்டும். பொதுத்துறை நிறுவனங்கள் தங்களது பணியில் 20 விழுக்காட்டை (ஜாப் ஆர்டர்) சிறு  குறு தொழில் நிறுவனங்களுக்கு வழங்க வேண்டும். 8, 10, 12ஆம் வகுப்பு, ஐடிஐ  படித்து முடித்து வேலைவாய்ப்பு அலுவல கத்தில் பதிவு செய்துள்ளவர்களை சிறு குறு  நிறுவனங்களில் 3 ஆண்டுகள் பயிற்சி பெற வேண்டும் என்பதை அரசு கட்டாயமாக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன. இந்த கோரிக்கைகள் தொடர்  பாக விரைவில் தொழிற்துறை அமைச்சரை சந்திக்க உள்ளனர்.

;