வெள்ளி, ஆகஸ்ட் 7, 2020

மாவட்டங்கள்

img

ஜெ.அன்பழகன் இறப்பு திமுகவிற்கு பேரிழப்பு: படத்திறப்பு நிகழ்வில் மு.க.ஸ்டாலின் உருக்கம்

சென்னை, ஜூலை 4 - ஜெ.அன்பழகன் இறப்பு, திமுகவிற்கு பேரிழப்பு என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கூறினார். திமுக திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினரும், தென்சென்னை மேற்கு  மாவட்டச் செயலாளருமான ஜெ.அன்பழகன் கொரோனாவால் பாதிக்கப்பட்டு ஜூன் 10அன்று உயிரிழந்தார். அவரது உருவப் படத்தை சனிக்கிழமையன்று (ஜூலை 4) தமது இல்லத்தில் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்து இரங்கல் உரையாற்றினார். அப்போது அவர், சட்டமன்றத்தில் சிங்கம்போல் கர்ஜிக்கக் கூடியவர்; சட்டமன்ற உறுப்பினராக எப்படி செயலாற்ற வேண்டும் என்பதற்கும், மாவட்டச் செயலாளர் என்ற  பொறுப்புக்கு உதாரணமாகவும் அன்பழகன் திகழ்ந்தார். மனதில் பட்டதை தைரியமாக, வெளிப்படையாக பேசக் கூடியவர் ஜெ.அன்பழகன். அவரது மறைவு ஒட்டுமொத்த திமுக-விற்கு பெரும் இழப்பு. தனிப்பட்ட முறையில் தனக்கு பேரிழப்பு என்றார். கொரோனாவில் இருந்து மக்களைக் காக்கப் போராடியவர், கொரோனாவுக்கே பலியாக வேண்டியதாகிவிட்டது. கொரோனா எதிர்ப்புப் போரில் ஜெ.அன்பழ கனை இழந்துள்ளோம் என்றும் புகழஞ்சலி செலுத்தினார்.

;