செவ்வாய், ஆகஸ்ட் 11, 2020

மாவட்டங்கள்

img

சென்னை திருத்தங்கல் நாடார் கல்லூரியில் கணினி தொழிநுட்பப்பயன்பாட்டியல் போட்டி

 சென்னை, ஆக. 31 -  சென்னை பெரம்பூரில் உள்ள  திருத்தங்கல் நாடார் கல்லூரியில் கணினி பயன்பாட்டியல், கணினி அறிவியல், மென்பொருள் துறைகள் சார்பில் தேசிய அளவில் கணினி தொழில்நுட்பம் சார்ந்த பல்வேறு கல்லூரிகளுக்கு இடையேயான சிறப்பு போட்டி (சமார் 2 கே 19) நடை பெற்றது. இந்நிகழ்விற்கு கல்லூரி முதல்வர் முனைவர் எஸ்.முருகேசன் தலைமை தாங்கினார். கல்லூரி செயலாளர் மற்றும் தாளாளர் எம்.ஜி.இ.செல்லப்பழம் முன்னிலை வகித்தார்.  முனைவர் என்.ஜக்காரியா (மாநிலக் கல்லூரி), பி.விஜய் பிரசாத் (முகமது சதக்கல்லூரி) முனைவர் டி.சுனிதா ராணி (எம்.ஒ.பி பெண்கள் வைணவக் கல்லூரி)  ஆகி யோர் சிறப்பு விருந்தினர்களாக  பங்கேற்ற னர். கல்லூரிதுணை முதல்வர்கள் முனைவர் கே.சி.லலிதாம்பிகா, பேராசிரியர் எஸ்.ஆசைத்தம்பி ஆகியோர் கலந்துக்கொண்ட னர்.  நிகழ்ச்சியில்  ஒட்டுமொத்த சாம்பியன் கோப்பையை குருநானக் கல்லூரி பெற்றது. மேலும் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கோப்பைகளும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. 

;