மாவட்டங்கள்

காவிரியில் பாசனத்துக்காக நீர் திறப்பு எதிரொலி கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

ஈரோடு, ஆக.13- மேட்டூர் அணையில் இருந்து காவிரி ஆற்றில் 10 ஆயிரம் கனஅடி நீர் வெளியேற்றப்படுவதால் கரையோர பகுதி மக்களுக்கு ஈரோடு மாவட்ட நிர் வாகம் சார்பில் வெள்ள அபாய எச்ச ரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஈரோடு மாவட்ட ஆட்சியர் சி.கதிரவன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, தென்மேற்கு பருவமழையால் மேட்டூர்  அணைக்கு நீர் வரத்து அதிகரித்த தையடுத்து, மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு, செவ் வாயன்று காவிரி ஆற்றில் 3 ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது. இது படிப்படியாக தற்போது 10 ஆயிரம் கனஅடியாக உயர்த்தப்பட உள்ளது. எனவே, காவிரி ஆற்றங்கரை ஓரம், தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொது மக்கள், உடனடியாக மேடான பகுதிக்கு சென்று, பாதுகாப்பாக இருக்க வேண் டும். தங்களது கால்நடைகள், உட மைகளை பாதுகாத்துக் கெல்ல வேண் டும். காவிரி ஆற்றின் கரையோர பகுதிகளில் சிறுவர்கள், இளைஞர்கள், பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் உள்ளிட்ட அனைவரும் நீரில் இறங்கி குளிப்பது, மீன் பிடிப்பது, கால்நடை களை குளிக்க வைப்பது, புகைப்படம் எடுப்பதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். மேலும், வருவாய் துறை, பொதுப் பணித்துறை, காவல் துறை உள்ளிட்ட அனைத்து துறை சார்பில், தண்டோரா மூலமும், ஒலி பெருக்கி மூலமும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், பாதுகாப்பு, முன்னெச்சரிக்கை நட வடிக்கை மேற்கொள்ளப்பட்டு வரு கிறது என மாவட்ட ஆட்சியர் சி.கதிர வன் தெரிவித்தார்.

;