மாவட்டங்கள்

img

பாரதியார் பல்கலைக் கழகத்தை முற்றுகையிட்டு மாணவர்கள் போராட்டம்

பாரதியார் பல்கலைக்கழக நிர்வாகத்தால், பல மடங்காக உயர்த்தப்பட்ட கட்டணங்களை குறைத்திட கோரி இந்திய மாணவர் சங்கத்தினர் முற்றுகை போராட்டத்தை நடத்தினர்.

சமீபத்தில் பாரதியார் பல்கலைக்கழகம், தனது நிர்வாகத்திற்கு கீழே இயங்கும் கல்லூரிகளின் தேர்வு கட்டணம் மற்றும் சில நிபந்தனை கட்டணங்களை உயர்த்தி அறிக்கை ஒன்றை வெளியிட்டது. இதன் விளைவாக பல்கலைக்கழகத்திற்கு கீழே இயங்க கூடிய அனைத்து கல்லூரிகளின் கட்டணங்களும் பல மடங்காக உயர்த்தப்பட்டது. அதில் மாணவர்களின் தேர்வு கட்டணம், காண்டுனேசன் கட்டணம், விண்ணப்ப படிவக் கட்டணம் போன்றவை அடங்குகிறது. இந்நிலையில் இதை எதிர்த்து, இன்று இந்திய மாணவர் சங்கத்தினர் கோவையிலுள்ள பாரதியார் பல்கலைக்கழகத்தை முற்றுகை இட்டு மனு கொடுத்தனர்.

அந்த மனுவில் கூறியிருப்பதாவது, இளங்கலை மற்றும் முதுகலை மாணவர்களுக்கு பல மடங்காக உயர்த்தப்பட்ட கட்டணங்களை உடனடியாக குறைத்திட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதனடிப்படையில் மனுவை வாங்கிய பல்கலைக்கழக நிர்வாகம் ஒரு வாரத்திற்குள் பதில் அளிப்பதாக அறிவித்தது. இதன் பின்னர் மாணவர்கள் கலைந்து சென்றனர்.
 

;