மாவட்டங்கள்

img

டாஸ்மாக் சுமைப்பணி தொழிலாளர்களுக்கு கூலியை உயர்த்தி வழங்கிடுக!

கோவை, பிப்.16- தமிழக அரசின் வருவாயில் பெரும்பகுதியை ஈட்டித்தரும் டாஸ்மாக் குடோன்களில் பணி யாற்றும் சுமைப்பணி தொழிலா ளர்களுக்கு மதுபானப் பெட்டி ஒன்றுக்கு ரூ.4.50 என்பதை 7 ரூபா யாக உயர்த்தி வழங்க வேண்டும் என்று டாஸ்மாக் சுமைப்பணி தொழி லாளர்கள் மாநாடு வலியுறுத்தி யுள்ளது.  தமிழ்நாடு டாஸ்மாக் குடோன் சுமைப்பணி தொழிலாளர்களின் மாநில கோரிக்கை மாநாடு கோவை, மசக்காளிபாளையம் ஹர்சா மஹா லில் ஞாயிறன்று நடைபெற்றது. இந்த மாநாட்டிற்கு சிஐடியு கோவை மாவட்ட சுமைப்பணித்தொழிலாளர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஆர். ராஜன் தலைமை வகித்தார். பொரு ளாளர் எம்.எஸ்.பீர்முகமது முன் னிலை வகித்தார். சிஐடியு மாவட்டத் தலைவர் சி.பத்மநாபன் மாநாட்டை துவக்கி வைத்து உரையாற்றினார். தமிழ்நாடு சுமைப்பணி தொழிலாளர் சம்மேளனத்தின் மாநிலத் தலை வர் எஸ்.குணசேகரன் விளக்கவுரை யாற்றினார். அடுத்தடுத்த போராட்ட அறிவிப்புகள் குறித்து பொதுச்செயலாளர் ஆர்.வெங்கிட பதி உரையாற்றினார். முன்னதாக மாநாட்டை வாழ்த்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நட ராஜன் உரையாற்றினார்.
தீர்மானங்கள் 
லிகர் மற்றும் பீர் பெட்டி ஒன்றுக்கு கூலி ரூ.7 ஆக உயர்த்திட வேண்டும். கவர் இல்லாத பிரிமியர் பெட்டி, பெட்டிக்குள் பெட்டி ஆகியவற்றிக்கு ரூ.8 ஆக உயர்த்த வேண்டும். வெளி நாட்டு மதுபான பெட்டி ஒன்றிற்கு ரூ.35 இல் இருந்து ரூ.50 ஆக உயர்த்த வேண்டும். அனைத்து டாஸ்மாக் குடோன்களிலும் ஞாயி றன்று வார விடுமுறை வழங்க வேண்டும். விடுமுறை நாட்களில் பணியாற்ற இரட்டிப்பு கூலி வழங்க வேண்டும். இஎஸ்ஐ, பிஎப் வசதி, அரசு அடையாள அட்டை வழங்க வேண்டும். மேலும் அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் மார்ச் 4 ஆம் தேதியன்று அனைத்து டாஸ்மாக் குடோன்களில் பணி யாற்றும் சுமைப்பணி தொழிலா ளர்கள் கோரிக்கை அட்டை அணிந்து பணியாற்றுவது என்றும் மார்ச் 25 ஆம் தேதியன்று கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் நடத்துவது என்றும் மாநாட்டில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.  மாநாட்டை நிறைவு செய்து சிஐடியு மாநிலச் செயலாளர் சி. திருவேட்டை சிறப்புரையாற்றினார். இந்த மாநாட்டில் மாநிலம் முழு வதுமிருந்து 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட டாஸ்மாக் குடோன் சுமைப்பணி தொழிலாளர்கள் பங்கேற்றனர். நிறைவாக எம்.எச்.ஜஹாங்கீர் நன்றி கூறினார்.

;