மாவட்டங்கள்

img

கொரோனா ஊரடங்கில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குக தமிழகம் முழுவதும் இடது சாரி கட்சியினர் ஆர்ப்பாட்டம்

தஞ்சாவூர்,ஜூன் 9- தஞ்சை ரயிலடியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், சிபிஎம் மாவட்டச் செயலாளர் கோ.நீலமேகம், மாவட்டச் செயற்குழு உறுப்பினர் பி.செந்தில்குமார், மாநகரச் செயலாளர் என்.குருசாமி, மாவட்டக்குழு உறுப்பினர்கள் புண்ணியமூர்த்தி, சரவணன், மாநகரக் குழு உறுப்பினர்கள் நசீர், வசந்தி, சிபிஐ சார்பில் மாவட்ட நிர்வாகக் குழு உறுப்பினர் சி.சந்திரகுமார், மாவட்ட பொருளாளர் பாலசுப்பிரமணியன், மாநகரச் செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, ஏஐடியூசி துரை.மதிவாணன், சிபிஐ (எம்.எல்) ராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.  பூக்கார தெருவில் சிபிஐ மாநகரச் செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, சிபிஎம் ஆர்.கருணாநிதி, சிவகங்கை பூங்காவில் சிபிஎம் ராஜன், வடிவேலன், ஏஐடியுசி நிர்வாகி சேவையா, மருத்துவக் கல்லூரி சாலையில் சிபிஎம் து.கோவிந்தராஜூ, ஏ.கருப்பசாமி, ஞானமாணிக்கம், ஏ.கருப்புசாமி, கிளைச் செயலாளர் முத்துசாமி, குழந்தை அம்மாள், வனரோஜா சிபிஐ விஜயலட்சுமி, கீழவாசலில் சிபிஎம் கிளைச் செயலாளர் நமச்சிவாயம், சிபிஐ முத்துக்குமரன் கலந்து கொண்டனர். 

வல்லம்
தஞ்சை ஒன்றியம் வல்லத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சிபிஎம் ஒன்றிய செயலாளர் எம். மாலதி, சிபிஐ ஒன்றியச் செயலாளர் டி.கணேசன் ஆகியோர் தலைமை வகித்தனர்.சிபிஎம் மாவட்ட குழு உறுப்பினர் கே.அபிமன்னன், ஒன்றிய குழு உறுப்பினர் ஏ.ராஜ்குமார், எல்.ராமராஜ், கிளைச் செயலாளர் கருப்பையா, பார்வதி, சிபிஐ மாவட்ட இணைச் செயலாளர்  வி.கல்யாணசுந்தரம், நிர்வாகக் குழு உறுப்பினர் ஜி.கிருஷ்ணன், ஒன்றிய துணைச் செயலாளர் ஜி.ராமலிங்கம், கிளைச் செயலாளர் மாரிமுத்து உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பேராவூரணி பெரியார் சிலை அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் சிபிஎம் மாவட்டக் குழு உறுப்பினர் வி.கருப்பையா, ஒன்றியச் செயலாளர்கள் பேராவூரணி ஏ.வி.குமாரசாமி, சேதுபாவாசத்திரம் ஆர்.எஸ்.வேலுச்சாமி, ராமலிங்கம், வெ.ரெங்கசாமி, எஸ்.பாஸ்கர், சக்தி சிபிஐ ஒன்றிய செயலாளர் கோ.பன்னீர்செல்வம், நகரச் செயலாளர் சித்திரவேலு, ஜெயராஜ், காசியார், ராஜமாணிக்கம் பி.ஏ.கருப்பையா கலந்து கொண்டனர். திருச்சிற்றம்பலத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் சிபிஎம் மாணிக்கம், பரமசிவம், சிபிஐ விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் பா.பாலசுந்தரம், ரவி, சதீஷ் கலந்து கொண்டனர். 
திருவோணம் 
ஊரணிபுரம் கடைவீதியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் சிபிஎம் ஒன்றிய செயலாளர் பி.கோவிந்தராசு, மாவட்டக்குழு உறுப்பினர் கே.ராமசாமி, சிபிஐ ஒன்றியச் செயலாளர் கே.எம்.ராமசாமி, மாவட்ட துணைச் செயலாளர் பி.காசிநாதன் கலந்து கொண்டனர். ஒரத்தநாடு அண்ணா சிலை அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் சிபிஎம் ஒன்றிய செயலாளர் என்.சுரேஷ்குமார், கோவிந்தராசு சி.மோகன்தாஸ், ஆர்.ரமேஷ், ஜவஹர், பாஸ்கர், சிதம்பரம், நகரச் செயலாளர் வசந்தகுமார், எல்ஐசி ஊழியர் சங்கம் விஜயன், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மதுக்கூர் பேருந்து நிலையம் அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சிபிஎம் ஒன்றிய செயலாளர் வை.சிதம்பரம்,சிபிஐ ஒன்றிய செயலாளர் எம்.பாரதிமோகன் ஆகியோர் தலைமை வகித்தனர்.சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர்.சி.பழனிவேலு கண்டன உரையாற்றினார். சிபிஎம் மாவட்டக் குழு உறுப்பினர்கள் ஆர்.காசிநாதன், ஆர்.கலைச்செல்வி, லட்சுமணன், அய்யநாதன், கிருஷ்ணன், சுப்பிரமணியன் சபரிநாதன், மாதர் சங்க ஒன்றியச் செயலாளர் கலாவதி, சிபிஐ அன்பழகன் துரைராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 
திருவையாறு 
திருவையாறு ஒன்றியம் கண்டியூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் சிபிஎம் மாவட்ட குழு உறுப்பினர்கள் எம்.ராம், எம்.பழனிஅய்யா, ஒன்றியச் செயலாளர் ஏ.ராஜா, ஒன்றியக் குழு உறுப்பினர் ஆர்.பிரதீப் ராஜ்குமார், விதொச ஒன்றியத் தலைவர் ஜி.செல்வகுமார், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் வீரமோகன், சக்கரவர்த்தி கலந்து கொண்டனர். பட்டுக்கோட்டையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றியச் செயலாளர்கள் சிபிஎம் எஸ்.கந்தசாமி, சிபிஐ ஏ.எம்.மார்க்ஸ் ஆகியோர் தலைமை வகித்தனர். சிபிஎம் வி.ச மாவட்ட துணைத் தலைவர் ஏ.கோவிந்தசாமி, விச மாவட்டக் குழு உறுப்பினர் எம்.செல்வம், பெஞ்சமின், முருக.சரவணன், ஜீவானந்தம், மோரீஸ் அண்ணாதுரை, விதொச உலகநாதன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சி.பக்கிரிசாமி, நகரச் செயலாளர் எம்.எம்.சுதாகர், எம்.காளிதாஸ் கலந்து கொண்டனர். 
கும்பகோணம் 
சிபிஎம் கும்பகோணம் நகரம் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு நகர செயலாளர் கா.செந்தில்குமார், மாவட்ட செயற்குழு சின்னை.பாண்டியன் நகர குழு உறுப்பினர்கள் ஏ.செல்வம், ஆர்.ராஜகோபால், பழ.அன்புமணி, மாணவர் சங்க மாவட்ட துணை செயலாளர் காயத்திரி, உமா மகேஸ்வரி கலந்து கொண்டனர்.  திருவிடைமருதூர் தெற்கு ஒன்றியம் நாச்சியார்கோ யில் கடைவீதியில் சிபிஎம் திருவிடைமருதூர் தெற்கு ஒன்றிய செயலாளர் பழனிவேல் தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் அருளரசன், ஒன்றியகுழு உறுப்பினர்கள் தருமையன், ஆறுமுகம், திருவேங்கடம் வெங்கடேசன், சிபிஐ மாவட்ட குழு உறுப்பினர் ராஜலெட்சுமி பூபதி, கலையரசன் கலந்து கொண்டனர். திருவிடைமருதூர் வடக்கு ஒன்றியம் திருபுவனம் கடைவீதியில் சிபிஎம் வடக்கு ஒன்றிய செயலாளர் சா.ஜீவபாரதி, சிபிஐ ராமலிங்கம், சிபிஎம்எல் முனியப்பன் ஆகியோர் தலைமையில் சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜெயபால், மாவட்ட குழு பக்கிரிசாமி, ஒன்றியகுழு உறுப்பினர்கள் நாகேந்திரன், சேகர், கோவிந்தராஜ், சிபிஜ மணிமுர்த்தி கலந்து கொண்டனர்.
தேவனாஞ்சேரி
கும்பகோணம் ஒன்றியம் தேவனாஞ்சேரி கடைவீதியில் சிபிஎம் குடந்தை ஒன்றிய செயலாளர் பி.ஜேசுதாஸ், மாவட்ட குழு உறுப்பினர் சி.நாகராஜன், ஒன்றிய குழு நாகமுத்து, சம்சுதீன், கணேசன், சுதாகர், சிபிஎம்எல் நாகமுத்து கலந்து கொண்டனர்.
பாபநாசம் பேருராட்சி அலுவலகம் முன்பு சிபிஎம் ஒன்றிய செயலாளர் பி.எம்.காதர்உசேன், சிபிஐ ஒன்றிய செயலாளர் செல்லதுறை, சிபிஎம் முரளி மாதவன், சேக்அலவுதீன், இளங்கோவன், சிபிஐ குணசேகரன், தில்லைவனம், தர்மராஜ் கலந்து கொண்டனர். மேலும் மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் 200-க்கும் மேற்பட்ட மையங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 
அரியலூர்
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் காந்தி பூங்கா முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. சிபிஎம் மாவட்டச் செயலாளர் ஆர்.மணிவேல் தலைமை வகித்தார். மாவட்ட குழு உறுப்பினர் . துரைராஜ், எஸ்மீனா, பத்மாவதி, தங்கராஜ், அம்பிகா, எ.பல்கீஸ் சேப்பருமாள், சிபிஐ எஸ் ராஜா, பெரியசாமி, முத்துகிருஷ்ணன், சபாபதி, எஸ்ஆனந்தன், பன்னீர்செல்வம் முன்னிலை வகித்தனர். சிபிஎம் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் கே.மகாராஜன், ஜெயங்கொண்டம் ஒன்றிய செயலாளர் வெங்கடாசலம், தா.புளூர் ஒன்றிய செயலாளர் ராதாகிருஷ்ணன், சிபிஐ ஒன்றிய செயலாளர் சி.ராம நாதன் உள்பட 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அதனைத்தொடர்ந்து ஊர்வலமாக தாலுகா அலுவலகம் சென்று கோரிக்கை மனுவினை தலைமையிடத்து துணை வட்டாட்சியரிடம் கொடுத்தனர். அரியலூர் தாலுகா அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சிபிஐ மாவட்ட செயலாளர் உலகநாதன் தலைமை வகித்தார். சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பி னர் இளங்கோவன், பி.துரைசாமி, ஆர் சிற்றம்பலம், சிபிஐ மாவட்ட துணை செயலாளர் தண்டபாணி, ஒன்றிய செயலாளர்கள் ஜி ஆறுமுகம், ஜி மணிவேல், துரை அருணன், எஸ்வி சாமிதுரை, அழகு துறை கலந்து கொண்டனர். தொடர்ந்து வட்டாட்சியர் அலுவலகம் சென்று கோரிக்கை மனுவினை தலைமையிடத்து துணை வட்டாட்சியரிடம் கொடுத்தனர்.
கரூர்
கரூர் தாந்தோணி மலையிலுள்ள சிபிஐ மாவட்டக் குழு அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சிபிஐ மாவட்ட செயலாளர் ரத்தினம் தலைமை வகித்தார். சிபிஎம் மாவட்டச் செயலாளர் கே.கந்தசாமி, சிபிஐ (எம்எல்) கட்சி மாவட்ட செயலாளர் ராமச்சந்திரன் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.சிபிஎம் மாவட்ட குழு உறுப்பினர்கள் ஜீவானந்தம், தண்டபாணி, சண்முகம், கரூர் நகர சக்திவேல், கணேஷ், அஜித், சிபிஐ மாவட்ட நிர்வாகி மோகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.  சிபிஎம் கரூர் ஒன்றியக் குழு சார்பில் ஆர்ப்பாட்டம் கட்சியின் ஒன்றிய முழு அலுவலகம் முன்பு நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றியக் குழு உறுப்பினர் பூரணம் தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜி.ஜீவானந்தம், மாவட்டக்குழு உறுப்பினர் ஆர்.ஹோச்சுமின் கண்டன உரையாற்றினர்.
குளித்தலை
சிபிஎம் குளித்தலை ஒன்றிய குழு சார்பில் குளித்தலை பேருந்து நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் பிரபாகரன் தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் பி.ராஜு, மாவட்ட குழு உறுப்பினர் இரா.முத்துச்செல்வன் உரையாற்றினர். சிபிஎம் அரவக்குறிச்சி ஒன்றியக் குழு சார்பில் அரவக்குறிச்சி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் மாவட்ட குழு உறுப்பினர் கே.வி.கணேசன் தலைமை வகித்தார். முன்னாள் ஒன்றிய செயலாளர் ஆறுமுகம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். சிபிஎம் தோகமலை ஒன்றிய குழு சார்பில் தோகைமலை பேருந்து நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் கே.சக்திவேல் தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் பி.இலக்குவன் கண்டன உரையாற்றினார்.  சிபிஎம் சார்பில் க.பரமத்தி கடைவீதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சிபிஎம் ஒன்றிய செயலாளர் கே.வி.பழனிச்சாமி தலைமை வகித்தார்.

;