திங்கள், ஆகஸ்ட் 3, 2020

மாவட்டங்கள்

img

பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் அமைப்பை தடை செய்திடுக மாவட்ட ஆட்சியரிடம் வாலிபர் சங்கம் வலியுறுத்தல்

கோவை, ஜூலை 6 –  மக்கள் விரோத பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் அமைப்பை தடை செய்ய வலியுறுத்தி திங்களன்று மாவட்ட ஆட்சியரிடம் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் மனு அளித்த னர்.

தமிழகத்தின் பல்வேறு பகு திகளில் பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் அமைப்பு செயல்பட தடைவிதித் துள்ளது. சட்டபூர்வமான எவ்வித வழிவகைகளும் இல்லாதபோது அந்த அமைப்பு காவல்துறையி னரின் துணை அமைப்பா கவே செயல்பட்டு வருகிறது. இதன்காரணமாக பல்வேறு மனித உரிமை மீறல்கள் நடை பெற்று வருகிறது.

அதிகார தோரணையோடு இவர்கள் நடந்து கொள்ளும் விதம் சாதாரண பொதுமக்கள் கடுமையாக பாதிக் கப்படுகின்றனர். எனவே காவல் துறையினரின் மாண்மை பாது காக்கும் வகையில் பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் அமைப்பு செயல்பட தடைவிதிக்க வேண்டும் என வலியுறுத்தி கோவை மாவட்ட ஆட்சியரிடம் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் ஸ்டாலின்குமார், செய லாளர் கே.எஸ்.கனகராஜ் உள் ளிட்ட நிர்வாகிகள் மனு அளித்த னர்.  

இதேகோரிக்கையை வலியு றுத்தி திராவிட தமிழர் கட்சி யின் தலைவர் வெண்மணி தலை மையிலான நிர்வாகிகள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

திருப்பூர்

திருப்பூரில் பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் அமைப்பை தடை செய்ய வலியுறுத்தி இந்திய ஜனநா யக வாலிபர் சங்கத்தினர் திருப்பூர் மாவட்ட ஆட்சிய ரிடம் மனு அளித்தனர். இதில், வாலிபர் சங்க திருப்பூர் மாவட் டச் செயலாளர் செ.மணிகண்டன், நிர்வாகிகள் சரவணன், சம்பத், கண்ணன் மற்றும் பாலசுப்பிர மணியம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

ஈரோடு

 ஈரோடு மாவட்டத்தில் இந்திய ஜனநாய வாலிபர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் சசி தலை மையில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது. இதில், மாவட்டத் தலைவர் விஸ்வநாதன், மாவட்ட நிர்வாகிகள் பலர் உடனி ருந்தனர்.

;