செவ்வாய், ஆகஸ்ட் 4, 2020

மாவட்டங்கள்

img

கோவை செல்வபுரத்தில் 116 பேருக்கு கொரோனா தொற்று- பொதுமக்கள் பீதி

கோவை, ஜூலை 6 -  கோவை செல்வபுரம் அசோக் நகர் பகுதியில் ஒரே நாளில் 116 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது கோவை மக்களிடையே பீதியை உருவாக்கியுள்ளது. கோவை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் தீவிர மடைந்து வருகிறது. ஒவ்வொரு நாளும் ஐம்பதுக்கும் மேற்பட் டோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இத னால் பரிசோதனைகள் அதிகப் பட்டுத்தப்பட்ட நிலையில், தற் போது மாவட்டத்தில் பாதிக்கப் பட்டவர்களின் எண்ணிக்கை 740-ஐ கடந்தது.  இந்நிலையில், கோவை செல் வபுரம்  மற்றும் செட்டிவீதி பகுதி யில் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வந்தது. குறிப்பாக அதி முக சட்டமன்ற உறுப்பினர் அம் மன் அர்ஜூனன் உள்ளிட்ட இவர்களின் குடும்பத்தினருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டி ருந்தது.

இதைத்தொடர்ந்து அப்பகுதி தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு மருத் துவ பரிசோதனை அதிகரிக்கப்பட் டது. இதன் ஒருபகுதியாக  செல் வபுரம் சுற்றியுள்ள பகுதிகளில் 150 க்கும் மேற்பட்ட நபர்களுக்கு கொரோனா பரிசோதனைகள்  செய்யப்பட்டது. இதில் 116 பேருக்கு கொரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட் டுள்ளது. இதனால், அப்பகுதி மக் கள் அச்சமடைந்துள்ளனர்.   இத னைத்தொடர்ந்து, அப்பகுதி முழு வதும் சுகாதாரத்துறை கட்டுப் பாட்டில் கொண்டு வரப்பட் டுள்ளது. மேலும், அப்பகுதியில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு, நோய் கட்டுப்பாட்டு மண்டலமாக அறிவிக்கப்பட்டு, தடுப்புகள் அமைத்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. அரசு போக்குவரத்து ஊழியருக்கு தொற்று இதற்கிடையே, கோவை அரசு போக்குவரத்து கழகம் உக்கடம் கிளை 2ல் பணிபுரியும் தொழில் நுட்ப பணியாளர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய் யப்பட்டுள்ளது. இதனைய டுத்து கடந்த 1 ஆம் தேதியில் இருந்து பணிக்கு வந்தவர்கள் அனைவருக்கும் மருத்துவ பரி சோதனைக்கு உட்படுத்தப்பட் டனர்.  

;