மாவட்டங்கள்

img

பெரு நிறுவனங்களின் பல லட்சம் கோடி வராக்கடனை கறாராக வசூலித்திடுக! இந்தியன் ஓவர்சீஸ் வங்கி பணியாளர் சங்க மாநில மாநாடு வலியுறுத்தல்

கோவை, பிப்.16- ஐபிசி சட்டத்தை கைவிட்டு பெரு நிறுவனங்களின் வராக்கடன்களை கறாராக வசூலித்திட வேண்டும் என்று கோவையில் நடைபெற்ற இந்தியன் ஓவர்சீஸ் வங்கி பணி யாளர் சங்கத்தின் மாநில மாநாடு வலியுறுத்தியுள்ளது.  இந்திய வங்கி ஊழியர் சம்மேள னத்தின் (பெபி) இணைக்கப்பட்ட சங்கமான இந்தியன் ஓவர்சீஸ் வங்கி பணியாளர் சங்கத்தின் 9 ஆவது மாநில மாநாடு கோவை, கணபதியில் ஞாயிறன்று நடை பெற்றது. இந்த மாநாட்டிற்கு மாநில தலைவர் எம்.செந்தூர்நாதன் தலைமை வகித்தார். இணைச் செய லாளர் சி.ஜெய்சந்திரன் வர வேற்றார். மாநாட்டை துவக்கி வைத்து பொதுச்செயலாளர் என்.ராஜகோபால் உரையாற்றினார். சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜி.ஆர்.ரவி அறிக்கைகளை சமர்ப்பித்தார்.  முன்னதாக மாநாட்டை வாழ்த்தி இந்திய வங்கி ஊழியர் சங்கத்தின் கோவை மாவட்டத் தலைவர் என்.சுப்பிரமணியன், தென்மண்டல இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் இணை செயலாளர் வி.சுரேஷ் ஆகி யோர் உரையாற்றினர். நிறைவாக இந்திய வங்கி ஊழியர் சம்மேள னத்தின் இணைச்செயலாளர் சி.பி.கிருஷ்ணன் சிறப்புரையாற்றினார்.
நிர்வாகிகள் 
மாநாட்டில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். சங்கத்தின் மாநில தலைவராக எஸ்.தீன தயாளன், பொதுச் செயலாளராக ஜி.ஆர்.ரவி, பொருளாளராக எஸ். திருவேங்கடம் உள்ளிட்ட 15 பேர் கொண்ட நிர்வாகிகள் மற்றும் 13 பேர் கொண்ட செயற்குழு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
தீர்மானங்கள்
2014 இல் பாஜக மத்தியில் ஆட் சிக்கு வரும் முன்பு வராக்கடன் ரூ.2.16 லட்சம் கோடியாக இருந்தது. தற்போது ரூ. 14 லட்சம் கோடி யாக உயர்ந்துள்ளது. இதில், 88 சத விகிதம் பெரு நிறுவனங்களினால் ஏற்பட்ட வராக்கடன் என்று ரிசர்வ் வங்கியின் நிதி ஸ்திரத்தன்மை (பைனான்சியல் ஸ்டெபிலிட்டி) அறிக்கை கூறுகிறது. பொதுத்துறை வங்கிகள் உருவாக்கும் மொத்த லாபத்திற்கும் கூடுதலாகப் பெரு நிறு வனங்களின் வராக்கடனுக்காக ஒதுக்கீடு செய்து பொதுத்துறை நிறுவனங்களை நிகர நஷ்ட மடையச் செய்கின்றனர் மத்திய ஆட்சியாளர்கள். ஆகவே, ஐபிசி சட்டத்தை கைவிட்டு வராக் கடன்களை கறாராக வசூ லித்திட வேண்டும். கடனை திருப்பிக் கட்டாத செயலை கிரிமினல் குற்ற மாக கருதும் வகையில் கடுமை யான நடவடிக்கை எடுக்க சட்டம் இயற்றப்பட்ட வேண்டும். கோவை யில் குடிநீர் விநியோகத்திற்கு சூயஸ் நிறுவனத்துடன் செய்யப்பட்ட ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும். வங்கியில் பெண் ஊழி யர்களின் நியாயமான கோரிக்கை யை உடனடியாக நிறைவேற்ற வேண்டும். 11 ஆவது இருதரப்பு ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை துவக்கி விரைவில் முடிக்க வேண்டும் என்று வலியுறுத்தி மாநாட்டில் தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.

;