மாவட்டங்கள்

பேஸ் மேக்கர் பொருத்தி கோவை அரசு மருத்துவமனை சாதனை

கோவை, அக். 22 – கோவை அரசு மருத்துவமனையில் முதன்முறையாக இதய நோயாளிக்கு பேஸ்மேக்கர் கருவி பொருத்தி சாதனை புரிந்துள்ளனர்.  ஈரோடு மாவட்டத்தை சேர்ந்தவர் விவசாயி குப்பண்ணன். இவர் திடீரென மயக்கம் அடைந்ததை தொடர்ந்து சிகிச்சைக் காக கோவை அரசு மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் இதய துடிப்பு குறைவாக இருப்பது கண்டு பிடித்தனர். நிமிடத்திற்கு 72 முறை துடிப்பு கள் இருப்பதற்கு பதிலாக 30 முதல் 40 அளவிலேயே இருதய துடிப்பு இருப்பதை கண்ட மருத்துவர்கள் அவருக்கு பேஸ் மேக் கர் (இதய முடுக்கி) பொருத்த முடிவு செய்தனர். இதனை தொடர்ந்து கோவை அரசு மருத்துவமனை இருதயவியல் துறை மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மூலம் பேஸ் மேக்கர் கருவியை பொருத்தினர். இது குறித்து கோவை அரசு மருத்துவ கல்லூரி முதல்வர் அசோகன் கூறுகையில், சென்னை, மதுரை போன்ற பெரு நக ரங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளில் மட்டுமே செய்யப் பட்டு வந்த இந்த நவீன சிகிச்சை கோவை அரசு மருத்துவ மனையில் முதல் முறையாக வெற்றிகரமாக செய்யபட்டு உள்ளது. மேலும் மயக்க மருந்து கொடுக்காமல் பேஸ் மேக் கர் கருவி பொருத்த வேண்டிய இடத்தில் வலி தெரியாத அள வுக்கு உணர்வு நீக்கும் ஊசி மூலம் சிகிச்சை அளித்து பேஸ் மேக்கர் பொருத்தபட்டது. இந்த பேஸ் மேக்கர் கருவி பொருத்தியதன் மூலம் அவரது இருதய துடிப்பு அதிகரித்து உள்ளதாகவும் 10 முதல் 15 ஆண்டு கள் வரை ஆரோக்கியமாக வாழ முடியும். மேலும், இதய துடிப்பு குறைந்தால் கருவியில் இருந்து மின்சக்தி கிடைக்க பெற்று இதய துடிப்பை அதிகரிக்க செய்யும். இந்த பேஸ் மேக்கர் கருவி தேவையான நேரத்தில் மட்டுமே இயங்கும் எனவும் தேவைபட்டால் 10 ஆண்டுகளுக்கு பிறகு ஜென ரேட்டர் பகுதியை மாற்றி கொள்ளலாம் என தெரிவித்தார்.

;