திங்கள், ஆகஸ்ட் 3, 2020

மாவட்டங்கள்

கொரோனா மருத்துவ ஆய்வகத்தில் முறைகேடு கோவையில் 4 ஆய்வகத்தின் உரிமம் ரத்து

கோவை, ஜூலை 6 -  கொரோனா பரிசோதனை செய்ய  அனுமதிக்கப்பட்ட 4 பரிசோதனை மையங்கள் விதிமுறைகளை மீறி செயல்பட்டதைத் தொடர்ந்து அந்த பரி சோதனை மையங்களுக்கான  அனு மதியை சுகாதாரத்துறை ரத்து செய் தது. கோவையில்  கொரோனா பரிசோ தனை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் இஎஸ்ஐ மருத்துவக்கல்லூரி மருத்துவமனை ஆகிய இடங்களில் நடைபெறுகின் றது. இதை தவிர்த்து 8 தனியார் பரி சோதனை மையங்களில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள சுகாதாரத் துறை அனுமதி அளித்துள்ளது. இந்நி லையில் கோவையில் உள்ள தனி யார் பரிசோதனை மையங்கள் விதிமு றைகளை மீறி கூடுதல் பரிசோதனை மேற்கொள்வது குறித்து சுகாதாரத் துறைக்கு புகார்கள் சென்றன.

குறிப் பாக இலவச மருத்துவக் காப்பீடு பெற்ற நோயாளிகள் இந்த மையங்க ளில் சோதனை செய்து பயன்பெறலாம் என்பதை தவறாக பயன்படுத்தி  போலியான ஆதார் அட்டைகளை வைத்து அரசின் வழிகாட்டுதலை  மீறி கூடுதல் நபர்களுக்கு பரிசோதனை செய்து  மோசடி செய்துள்ளது. இது தொடர்பாக காப்பீட்டு நிறுவனங்க ளிடம் இருந்து சுகாதாரத்துறைக்கு புகார்கள் சென்றது. இதனையடுத்து  காப்பீட்டு நிறுவனங்கள் சுட்டி காட்டிய கோவையை சேர்ந்த  ஏசியா லேபாரட்டரி, பையோ லைன் லேப், மைக்ரோ பாயாலஜி லேப், கிருஷ்ணா  லேபாரட்டரி ஆகிய நான்கு பரிசோ தனை மையங்களுக்கு கொடுத்திருந்த அனுமதியை சுகாதாரத்துறை ரத்து செய்தது. கொரோனா பரிசோதனை செய்வதாக காட்டி தனியார் பரி சோதனை மையங்கள் மோசடி செய்தி ருப்பது  குறித்து சுகாதாரத்துறை அதி காரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

;