மாவட்டங்கள்

img

தேர்வு முறையால் எதிர்காலம் பாதிக்கப்படும்

கோவை, ஜூலை 19- வேட்டை தடுப்பு காவலர் களுக்கான பணியிடங்களைத் தேர்வு மூலம் நிரப்பும் அரசின் முடிவை திரும்பப் பெற வலியுறுத்தி வேட்டை தடுப்புக் காவலர்கள் கோவையில் வெள்ளியன்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.  சமூக வனவியல் மற்றும் வன விரிவாக்கல் பிரிவின் கீழ் பணி யாற்றி வரும் வேட்டை தடுப்புக் காவலர்களை, தேர்வுகள் மூலமாக தேர்ந்தெடுக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு அரசு வன வேட்டை தடுப்புக் காவலர்கள் மற்றும் இதர பணியாளர் சங்கத்தின் சார்பில் கோவையில் டாடாபாத் பகுதியில் ஒரு நாள் அடையாள உண்ணாவிரத போராட்டம் நடை பெற்றது. இதுகுறித்து போராட் டத்தில் பங்கேற்றவர்கள் கூறுகை யில், வேட்டைத் தடுப்புகாவ லர்களுக்கான பணியிடங்களைத் தேர்வு மூலம் நிரப்பும் அரசின் முடிவால், எதிர்காலத்தில் வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் நிலைக்குத் தள்ளப்படும் சூழல்  உருவாகும். வனத்தை பாதுகாத் தால்தான் நாட்டின் ஒட்டு மொத்த வளத்தையும் பாதுகாக்க முடியும் என்பதை முழுமையாக உணர்ந்த வர்கள் நாங்கள். வேட்டைத்தடுப்பு காவலர்களாக உள்ள எங்களின் பெரும்பகுதி மலைவாழ் இனத்தைச் சேர்ந்தவர்களாக உள்ளோம்.

20 ஆண்டுகளுக்கும் மேலாக உயிரை பணயம் வைத்து வேலை செய்து வருகிறோம். நாங்கள் வன கண் காணிப்பாளர் போன்ற பதவிக்கு தகுதி வாய்ந்தவர்களாக உள்ளோம். ஆனால், தற்போது வழங்கப்படும் குறைந்த ஊதியத்தில்கூட ஜிஎஸ்டி பிடித்தம் செய்கின்றனர்.  இந்நிலையில், தற்போது தமி ழக அரசு அறிவித்துள்ள தேர்வின் மூலம் பணியிடத்தை நிரப் பும் புதியமுறை எங்களுக்கு அநீதியை இழக்கும் வகையில் உள்ளது. சமூக வனவியல் மற்றும் வனவிரிவாக்கல் பிரிவின் கீழ் பணியாற்றும் 1,119 வேட்டை தடுப்பு காவலர்களில் 144 பேர்  மட்டுமே பணிநிரந்தரம் செய்யப் பட்டுள்ளனர். ஆகவே எங்களின் நியாயமான கோரிக்கையை அரசு ஏற்று தொகுப்பூதியத்தில் உள்ள எங்களுக்கு காலமுறை ஊதியம் வழங்கவும், அனைவரையும் நிரந்த ரப்படுத்த வேண்டும். இந்நிலை தொடர்ந்தால் உள்ளிருப்பு மற்றும் தொடர் வேலை நிறுத்தம் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபடுவோம் என தெரிவித்தனர். இதில் தமிழ கத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று தங்களின் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

;