மாவட்டங்கள்

பொள்ளாச்சி ,கோவை முக்கிய செய்திகள்

லஞ்சம் வாங்கிய வனச்சரகர் கைது

பொள்ளாச்சி, ஜூலை 19- வால்பாறையில் தனியார்  தேயிலைத் தோட்டப் பகுதி யில் வெட்டிய மரங்களை எடுத்துச் செல்ல அனுமதியளிக்க லஞ்சம் வாங்கிய வால்பாறை வனச்சரகர் வியாழனன்று  கைது செய்யப்பட்டார்.  கோவை மாவட்டம், பொள்ளாச்சி அடுத்த வால்பாறை  வில்லோனி  பகுதியில் உள்ள தனியார் தேயிலை தோட்டத்தில் இருக்கும் மரங்களை  குத்தகைதாரர் உத்தரசாமி என்பவர் ஆனைமலை புலிகள் காப்பக வன அலுவலரிடம் அனுமதி பெற்று வெட்டியுள்ளார். வெட்டிய மரங்களை  லாரிகள் மூலம் எடுத்துச் செல்ல வால்பாறை வனசரகர் சத்தி கணேஷிடம் அனுமதி கேட்டுள்ளார். அதற்கு வனசரகர் சக்திகணேஷ் ஒரு லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டதாகத் தெரிகிறது . இதைத்தொடர்ந்து குத்தகைதாரர் உத்தரசாமி, கோவை லஞ்ச ஒழிப்பு காவல் துறையிடம் புகார் தெரிவித்துள்ளார். இந்நிலையில் அட்டகட்டி பகுதிக்கு வந்த வனசரகர் சக்தி கணேஷிடம், லஞ்ச ஒழிப்புத்துறையினர் வழங்கிய ரசாய னம் தடவிய பணத்தை குத்தகைதாரர் உத்தரசாமி கொடுத் தார். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு காவல் துறையினர் வனசரகர் சக்திகணேசை கையும் களவுமாக பிடித்தனர். இதனைத் தொடர்ந்து வழக்கு பதிவு செய்து, விசாரணை செய்து கொண்டிருக்கும்போது வனசரகர் சக்தி கணே ஷுக்கு உடல்நிலை குறைவு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து வால்பாறையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக் கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக லஞ்ச ஒழிப்பு துறையினர் தெரிவித்தனர்.

கோவையில் தொடர் சந்தனமரக்கடத்தல்

கோவை, ஜூலை 19- கோவை மாநகரில் சந்தன மரக் கடத்தல்தொடர்ந்து அரங்கேறி வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  கோவை மாநகரின் ரேஸ்கோர்ஸ் பகுதியைச் சுற்றி யுள்ள பல்வேறு பகுதிகளில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு தொடர்ந்து சந்தன மரங்கள் வெட்டப்பட்டு, கடத்தப்பட்டு வந்தது. புதனன்று சாய்பாபா காலனி முருகன்மில் குடியிருப்பு வளாகத்தில் உள்ள 3 சந்தன மரங்களை மர்ம நபர்கள் இருவர், ரம்பம் மற்றும் கத்தி போன்ற ஆயுதங்களால் வெட்டி கடத்தினர். இதனையடுத்து வியாழனன்று தடாகம் சாலை பகுதியில் காவல்துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த போது சந்தேகத்திற்கு இடமான வகையில் வந்த கார் ஒன்று அதிவேகமாகச் சென்றது. இதையடுத்து, மருதமலை சாலையில் காவல்துறையினர் விரட்டிப்பிடிக்கவே காரை ஓட்டி வந்த நபர்கள் வடவள்ளி அருகே காரை நிறுத்திவிட்டு தப்பியோடினர். காரை சோதனை செய்கை யில், அதில் சந்தன மரங்கள் மற்றும் அதனை வெட்டப் பயன்படுத்திய அரிவாள், கத்தி, ரம்பம் ஆகியவை இருந் தது. இதுகுறித்து சாயிபாபாகாலனி காவல்துறையினர் இச்சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  அதேபோல, கடந்த சில நாட்களுக்கு முன்பு ராம் நகர் அருகே மர்ம நபர்கள் சந்தன மரங்கள் வெட்ட முயன்றனர். இந்நிலையில், வெள்ளியன்று பந்தய சாலையில் சந்தன மரத்தை மர்மநபர்களால் வெட்டி கடத்த முயற்சி மேற்கொள் ளப்பட்டுள்ளது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் மூன்று இடங் களில் மர்ம நபர்கள் சந்தன மரங்களை வெட்டி கடத்தியும், கடத்த முயற்சி செய்துள்ள சம்பவம் காவல் துறையினருக்கு தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.

;