மாவட்டங்கள்

img

கருத்துக்கேட்புக் கூட்டத்தை ரத்து செய்த அதிகாரிகள்- பொதுமக்கள் ஆவேசம்

ஈரோடு, ஆக.13- நசியனூர் பகுதியில் இருக்கும் குப்பை எரிக்கும் இயந்திரத்தை மாற்ற கோரி நடைபெற இருந்த கருத்துக்கேட்புக் கூட்டத்தை ரத்து செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் நசிய னூர் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகை யிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். ஈரோடு மாவட்டம், நசியனூர் பேரூ ராட்சி சார்பில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் குப்பைகள் எரிக்கும் இயந் திரம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த இயந்தி ரமானது தனியார் பள்ளி அருகே அமைக் கப்பட்டுள்ளதால் குப்பைகள் எரிக்கும் போது அதில் இருந்து வெளியேறும் நச்சு புகையினால் மாணவ, மாணவியர்களுக்கு கண் எரிச்சல், மூச்சு திணறல், தொடர் இரு மல் உள்ளிட்டவைகளால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். எனவே பள்ளி மாணவ, மாணவியர்களின் நலன் கருதி குப்பைகள் எரிக்கும் இயந்திரத்தை வேறு பகுதிக்கு மாற்ற வேண்டும் என்று கடந்த வாரம் பள்ளி மாணவ, மாணவியர்கள், பெற்றோர்கள் நசியனூரில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து, நசியனூர் பேரூராட்சி செயல் அலுவலர் போராட்டத்தில் ஈடு பட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத் தினார். இதில், இது குறித்து நசியனூர் பேரூராட்சி அலுவலகத்தில் திடக்கழிவு மேலாண்மை திட்டம் செயல்படுத்துவது குறித்த ஆலோசனை கூடம் ஆகஸ்ட் 13  ஆம் தேதியன்று காலை 11.30 மணியள வில் நடைபெறுகிறது. இதில் உங்கள் கருத்துகளை பதிவு செய்யலாம் என எழுத்து பூர்வமாக அனைத்து கட்சி பிரதிநிதிகளிடம் வழங்கப்பட்டது. இந்நிலையில், செவ்வாயன்று (ஆக. 13) அனைத்து கட்சி நிர்வாகிகள், பள்ளி குழந்தைகள் உட்பட பலர் பேரூராட்சி அலுவலகம் முன்பு திரண்டனர். ஆனால், நடைபெறவிருந்த ஆலோசனை கூட்டம் ரத்து செய்யப்பட்டு விட்டதாக  அதிகாரிகள் அறிவித்தனர். இதனால், ஆவேசமடைந்த பொதுமக்கள் நசியனூர் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட் டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து. இப்பகுதியில் குப் பைகள் எரிக்கப்பட்டு வருவதை தடுக்கப் பட வேண்டும். குப்பை வேறு இடத்தில் எரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கருத் துக்கேட்புக் கூட்டம் நடத்தாமல் குப்பை களை எரிப்பது தடுக்கப்பட வேண்டும்  என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலி யுறுத்தினார்கள். இப்போராட்டத்தில், மார்க்சிஸ்ட் கம் யூனிஸ்ட் கட்சியின் ஈரோடு தாலுகா செய லாளர் எம்.நாச்சிமுத்து, மாதர் சங்கத்தின் மாவட்ட தலைவர் பி.லலிதா மற்றும் நிர் வாகி என்.பாலசுப்பிரமணி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

;