மாவட்டங்கள்

விவசாயிகளை பயிர் செய்யவிடாமல் தடுக்கும் மோடி அரசு

ஈரோடு, ஜூலை 15- விவசாயிகளை பயிர் செய்ய விடா மல் இந்த மோடி அரசு செயல்பட்டு வரு வதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் குற்றம் சாட்டியுள்ளார். ஈரோட்டில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில்  அக்கட்சியின் மூத்த தலை வர் தா.பாண்டியன் ஞாயிறன்று செய்தி யாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், மத்திய அரசும், மாநில அர சும் தங்களது ஆண்டு பட்ஜெட்டை சமர் பித்துள்ளது. இதில் கடுமையான வரிகளை உழைக்கும் மக்கள் மீது திணித்துள்ளனர். அதேநேரம், கார்ப்பரேட் நிறுவனங்கள் மீது இருந்த வரிகள் குறைக்கப்பட்டுள்ளது. சில வரிகள் முற்றிலும் கைவிடப்பட்டுள்ளது.  அதேநேரம், இந்த பட்ஜெட் ஊக்கம் தருகிற, நம்பிக்கை தருகிற பட்ஜெட்டாக இருக்குமானால் பங்கு சந்தைகள் ஏற்றம் காணப்பட வேண்டும். ஆனால், மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்பு வெளியிட்ட நாளில் இருந்து பங்குசந்தை தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறது. அயல்நாட்டு முதலீடுகள் (எப்டிஐ) இப்போது இந்தியா வில் இருந்து வெளிநாட்டிற்கு திரும்பிச் செல்கிறது.  

குறிப்பாக, மியூச்சுவல் ஃபண்டிலிருந்து 2 லட்சத்து 30 ஆயிரம் கோடி ரூபாய் ஒரே நாளில் வெளிநாட்டிற்கு போய்  உள்ளது. இவை அனைத்தும் தொழில்துறை யில் பெரும் அச்சத்தையும், வளர்ச்சிக்கு எதி ரான எச்சரிக்கையாகவும் அமைந்துள்ளது.  இதேபோல், விவசாய துறையிலும் அறிவிக்கப்படாத போரினை ஆளும் அர சுகள் நடத்தி வருகின்றன. விவசாயிகளின் ஒப்புதல் இல்லாமல் நிலங்களை கைப்பற்றி உயர்மின் கோபுரங்களை அமைத்து வருகின்றனர். விவசாயிகளை பயிர் செய்ய விடாமல் இந்த மோடி அரசு செயல்பட்டு வருகிறது. இத்திட்டத்திற்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பை தெரிவித்து வரும் வேலை யில், தமிழக அரசு விவசாயிகளை அடக்கி வருகிறது. ஆகவே, தமிழக அரசும், சுதந் திரமாக தமிழ்நாட்டின் நலனை பாதுகாப் பதற்காக இயங்கவில்லை. தமிழக அரசு  தனது சுய உரிமைகளை விட்டு கொடுத்து, அடிமைப்பட்டு வருகிறது. மத்திய அர சுக்கு அடிமைத்தனமாக தலையசைந்து செல்கிறது.  மறுபுறம், இந்திய அரசாங்கம் அமெரிக்க அரசுக்கு அடிபணிந்து செல் கிறது. இதனால், இந்தியா அனைத்து வகையிலும் பின்னடைவை நோக்கி முன்னேறுகிறது. இவைகளை களைவ தற்கு மதச்சார்பற்ற அணி தொடர்ந்து போராட்டங்களை நடத்த வேண்டும். இதனை நடத்துவதற்கு இடதுசாரி கட்சி கள் முன்னணியில் நிற்கும். இவ்வாறு அவர் கூறினார்.

;