மாவட்டங்கள்

img

ஏரியை தூர்வாரி பாதுகாக்க விவசாயிகள் வலியுறுத்தல்

தருமபுரி,  ஜூலை 19- தருமபுரி அருகே வறண்டு கிடக்கும் மதிகோன்பாளையம் ஏரியை தூர்வாரி நீர்நிலையை பாதுகாக்க வேண்டும் என்று விவ சாயிகள் வலியுறுத்தியுள்ளனர். தருமபுரி மாவட்டம், மதி கோண்பாளையம் அருகே காந்திபாளையம் கிராமத்தை யொட்டி பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் மதிகோண் பாளையம் ஏரி உள்ளது. இந்த ஏரியை ஒட்டியுள்ள செட்டிக் கரை, காந்திபாளையம், ராஜா தோப்பு ஆகிய பகுதியில் உள்ள ஆழ்துளை கிணறுகளுக்கு நீர்ப்பிடிப்பு ஆதாரமாக இந்த  ஏரியின் தண்ணீர் உள்ளது. இந்த ஏரியில் தண்ணீர் இல்லையென் றால், சுற்றுவட்டார கிணறுகள் மற்றும் போர்வெல்களில் தண் ணீர் வறண்டு விடும். கடந்த சில  மாதங்களாக, கடும் வறட்சி நிலவு வதால் ஏரி வறண்டு விட்டது. இந்த ஏரி கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு நிரம்பியது. அதன் பின் னர் ஏரியை தூர்வாராமல் விட்ட தால், தற்போது கழிவுநீர் நிரம்பி யும், சீமை கருவேல மரங்கள் முளைத்தும் ஏரி மாசடைந்து உள்ளது. எனவே, செட்டிக்கரை பகு திக்கு நீர் ஆதாரமாக இருக்கும் இந்த ஏரியை தூர்வாரவேண்டும் என அப்பகுதி விவசாயிகள் மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

;