மாவட்டங்கள்

தருமபுரி ,நாமக்கல் முக்கிய செய்திகள்

பிரதம மந்திரி கிஷான் மாந்தன் ஓய்வூதிய திட்டத்திற்கு விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்

தருமபுரி, ஜூலை 19- பிரதம மந்திரி கிஷான் மாந்தன் திட்டத்தில் ஓய்வூதியம் பெற விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் என தருமபுரி மாவட்ட ஆட்சியர் எஸ்.மலர்விழி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, இந்திய அரசின் வேளாண்மை கூட்டு றவு மற்றும் விவசாயிகள் நலத்துறை, இந்திய காப்பீடு நிறுவனம் ஆகியவை இணைந்து பிரதம மந்திரி கிஷான்  மாந்தான் விவசாயிகள் ஓய்வூதிய திட்டத்தை செயல் படுத்துகின்றன.  இந்த திட்டத்தின் நிதி மேலாண்மை மற்றும்  ஓய்வூதியம் வழங்கும் பொறுப்புகள் ஆயுள் காப்பீட்டு நிறுவனத்திடம் உள்ளது.  இது பயனாளிகள் விருப்பம் மற்றும் பங்களிப்புடன் கூடிய திட்டமாகும்.  ஓய்வூதிய திட் டத்தில் இணையும் விவசாயிகள் தங்கள் 60 வயதுக்கு பின்னர் மாதம் தோறும் ஓய்வூதியமாக ரூ.3 ஆயிரம் பெறுவார்கள். மேலும்,18 வயது முதல் 40 வயது வரையான விவ சாயிகள் இந்த திட்டத்தில் இணையலாம்.  2 ஹெக்டர் அள வுக்கும் குறைவான நிலம் கொண்ட சிறு, குறு விவசாயிகள் திட்டத்தில் சேர தகுதியானவர்களாவர்.  மாநில அளவில் பிரதம மந்திரியின் கிஷான் சம்மன் நிதி திட்டத்தை செயல்படுத்தும் துறை பிரதம மந்திரிகிஷான் மாந்தன் விவ சாயிகள் ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்தும். விவ சாயிகள் பொது இ-சேவை மையங்கள் மூலம் இந்த திட்டத் தில் சேரலாம்.  இதற்கு பதிவு கட்டணமாக ரூ.30 செலுத்த வேண்டும். திட்டத்தில் இணைந்த விவசாயிகள் தங்கள் வயதின் அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்ட தொகையை ரூ.55 முதல் ரூ.200 வரை மாதம் தோறும் செலுத்த வேண்டும். விவசாயிகள் செலுத்தும் தொகைக்கு சமமான தொகையை மத்திய அரசு செலுத்தும். மேலும், சம்பந்தப்பட்ட விவசாயி விரும்பினால் கிசான் சம்மன் நிதி திட்டத்தில் இருந்தும் இத்தொகை பிடித்தம் செய்யலாம்.  யாரேனும் இத்திட்டத்தில் இணைந்து இடைப் பட்ட சில மாதங்கள் அவர்களுக்கான தொகை செலுத் தாமல் விடுபட்டால், மீண்டும் இத்திட்டத்தில் சேர உரிய தொகையை வட்டியுடன் செலுத்தி இத்திட்டத்தை தொடர லாம்.  குறைந்த பட்சம் 5 ஆண்டுகள் சந்தாக தொகை செலுத்திய விவசாயி விரும்பினால் திட்டத்தில் இருந்து விலகிக் கொள்ளலாம். அவருக்கு அது வரை செலுத்திய தொகை வட்டியுடன் வழங்கப்படும். இந்த திட்டம் தரும புரி மாவட்டத்தில் விரைவில் அமல்படுத்தப்பட  உள்ளது. எனவே விவசாயிகள் இந்த திட்டத்தில் சேர விண்ணப் பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் எஸ்.மலர்விழி தெரி வித்துள்ளார்.

ஜூலை 23ல் நாமக்கல்லில் வாகனங்கள் ஏலம்

நாமக்கல், ஜூலை 19- மதுவிலக்கு காவல்துறையினரால் பறிமுதல் செய் யப்பட்ட வாகனங்கள் நாமக்கல் மாவட்ட மதுவிலக்குப் பிரிவு அலுவலகத்தில் ஜூலை 23 ஆம் தேதி பொது ஏலத்தில் விடப்படுகின்றன. இதுகுறித்து காவல் கண்காணிப்பாளர் அர.அருளரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,  நாமக்கல் மாவட்டத்தில் மதுவிலக்கு வழக்குகளில் கைப்பற்றப்பட்ட இரு சக்கர வாகனங்கள் நாமக்கல் மதுவிலக்கு பிரிவில் பொது ஏலத்தில் ஜூலை 23 ஆம் தேதி காலை 10 மணிக்கு விடப்பட உள்ளன. இந்த வாக னங்களுக்கு ஏலத் தொகைக்கான ரசீது மட்டும் வழங்கப்படும். ஏலம் விடப்பட இருக்கும் வாகனங்களை, வரும் 22 ஆம் தேதி மாலை 5 மணி முதல் மதுவிலக்கு பிரிவு அலுவலகத்தில் பொதுமக்கள் நேரடியாகப் பார்வையிடலாம். வாகனங்களை ஏலம் எடுப்பவர்கள் 23 ஆம் தேதி காலை 8 முதல் 9 மணிக்குள் ஏலம் விடப்படும் இடத்தில் முன்பணம் செலுத்திட வேண்டும். முன்பணம் செலுத்துபவர்கள் மட்டுமே ஏலத்தில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவர். வாகனத்தை ஏலம் எடுத்தவுடன், மீதமுள்ள ஏலத் தொகை, சரக்கு, சேவை வரி முழுவதையும் செலுத்தி, அப்போதே வாகனத்தைப் பெற்றுகொள்ளவேண்டும். மேலும் விவரங்களுக்கு, கூடுதல் காவல் கண்காணிப்பாளர் , மதுவிலக்கு அமல் பிரிவு, நாமக்கல் அலுவலகத்தினை நேரடியாகவோ, தொலைபேசி 04286-280022 எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

;