செவ்வாய், ஆகஸ்ட் 4, 2020

மாவட்டங்கள்

img

முறையாக குடிநீர் வழங்கக்கோரி ஜனநாயக மாதர் சங்கம் ஆர்ப்பாட்டம்

பென்னாகரம், ஜூலை 19- பென்னாகரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஏரியூர் பகுதியில் முறையாக குடிநீர் வழங்க வேண்டும் என வலியு றுத்தி அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட் டம் நடைபெற்றது. தருமபுரி மாவட்டம், பென்னா கரம் ஊராட்சி ஒன்றியத்திற் குட்பட்ட ஏரியூர் பகுதியில் ஒகே னக்கல் கூட்டு குடிநீர் தினசரி வழங்க நடவடிக்கை எடுக்க  வேண்டும். ஏரியூர் ஒங்காளி யம்மன் கோவில் தெருவில் உள்ள சிறு மின் விசை பம்பை உடனடியாக சரி செய்து அப்பகுதி மக்களுக்கு குடிநீர் வழங்க ஏற் பாடு செய்ய வேண்டும். அண்ணா  நகர் காலனி, இருளர் காலனி உள்ளிட்ட பகுதிகளுக்கு  ஆழ் துளைக் கிணறு அமைத்து சிறு மின்விசை பம்புகள் மூலம் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தில் வரும் குடிநீரை பயன்படுத்த பொது குழாய்கள் அமைக்க வேண்டும். அனுமதியின்றி வழங்கப்பட் டுள்ள குடிநீர் இணைப்புகளை உடனடியாக அகற்ற நடவ டிக்கை எடுக்க வேண்டும் என்பன  உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை களை வலியுறுத்தி வெள்ளியன்று அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் ஏரியூர் ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தங்கம்மாள் தலைமை வகித்தார். எம்.புனிதா, சிவசக்தி, முருகம் மாள், மல்லிகா ஆகியோர் முன் னிலை வகித்தனர். கோரிக்கை களை விளக்கி மாதர் சங்கத் தின் மாவட்ட செயலாளர் எஸ். கிரைஸாமேரி,  மாவட்ட பொருளா ளர் ராஜாமணி, மாவட்ட துணை தலைவர் பூபதி, பென்னாகரம் பகுதி தலைவர் வளர்மதி, செய லாளர் சுதா பாரதி ஆகியோர்  உரையாற்றினார். இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாவட்ட செயற்குழு உறுப் பினர் வி.விஸ்வநாதன், ஏரியூர் ஒன்றிய செயலாளர் என்.பி. முருகன், ஒன்றிய குழு உறுப்பி னர் மாதப்பன் உள்ளிட்ட ஏராள மானோர் கலந்து கொண்டனர்.

;