மாவட்டங்கள்

img

அடிப்படை வசதிகள் கேட்டு ஊராட்சி அலுவலகம் முற்றுகை

கோவை, ஜூலை 19– அடிப்படை வசதிகள் செய்து  தாரத கீரணத்தம் ஊராட்சி நிர்வா கத்தைக் கண்டித்து வெள்ளி யன்று மார்க்சிஸ்ட் கட்சியினர் ஊராட்சி அலுவலகத்தைமுற் றுகையிட்டு போராட்டத்தில் ஈடு பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.  கோவை, எஸ்எஸ்.குளம் ஒன்றியத்திற்குட்பட்டு கீரணத் தம் ஊராட்சி உள்ளது. புதுப் பாளையம், கொண்டையம் பாளையம், பண்ணாரியம்மன் நகர், சாம்பிராணிகுட்டை உள் ள்ளிட்ட ஏராளமான கிராமங் கள், ஆயிரக்கணக்கான குடியிருப் புகள் இந்த ஊராட்சி பகுதியில் உள்ளது. இங்கு தெருவிளக்கு, சாக்கடை வசதி, சாலை வசதி, மின் இணைப்பு, குடிநீர் இணைப்பு வழங்காதது, குப்பைகள் அள்ளா தது என எவ்வித அடிப்படை வசதி களும் செய்து தரப்படுவதில்லை. இதனால் கீரணத்தம் ஊராட்சிக் குட்பட்ட பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

 இதுகுறித்து மார்க்சிஸ்ட் கட்சி மற்றும் இந்திய ஜனநாயக வாலி பர் சங்கம் உள்ளிட்ட அமைப்பு கள் மனு அளித்தால் அதனை அதி காரிகளும் கண்டு கொள்வ தில்லை. உள்ளாட்சி தேர்தல் நடத்தாததால்  நிதி இல்லை. நாங் கள் என்ன செய்ய முடியும் என அதிகாரிகள் கைவிரிக்கின்றனர். இதனையடுத்து வெள்ளியன்று மக்களை திரட்டி மனுகொடுக்கும் போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கட்சி அழைப்பு விடுத்தது. இதனடிப்படையில் நூற்றுக்க ணக்கான பொதுமக்கள் திரண்டு உதவி வட்டார வளர்ச்சி அலுவ லர் அம்சவேணி, ஊராட்சி செயலா ளர் பாலசுப்பிரமணி உள்ளிட்ட அதிகாரிகளை முற்றுகையிட்ட தால் பரபரப்பு ஏற்பட்டது. இதனை யடுத்து மார்க்சிஸ்ட் கட்சியின் எஸ்எஸ்.குளம் ஒன்றிய செயலா ளர் ஆர்.கோபால், ஒன்றியக்குழு உறுப்பினர் சிதம்பரம், கிளை செயலாளர்கள் கண்ணன், திருநாவுக்கரசு, வடிவேல், திமுக நிர்வாகி பார்த்துவராசு, கொம தேக பொறுப்பாளர் முத்துசாமி ஆகியோர் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், ஒருமாத காலத்திற்குள் அடிப்படை தேவைகளை செய்து முடிப்பதாகவும், இதர கோரிக்கை கள் குறித்து அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று விரைவில் முடிப் பதாகவும் அதிகாரிகள் உறுதியளித் தனர். இதனையடுத்து போராட்டத் தில் ஈடுபட்ட அனைவரும் கலைந்து சென்றனர். 

;