மாவட்டங்கள்

img

நிலத்தடிநீர் மேம்பாடு குறித்து விழிப்புணர்வு கூட்டம்

தருமபுரி, ஜூலை 19- ஜல் சக்தி அபியான் திட்டம், மழைநீர் சேமிப்பு, தண்ணீர் சிக்கனம் குறித்து விழிப்புணர்வு கூட்டம் வெள்ளாளப்பட்டி ஊராட்சி மன்ற அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், அனைத்து வீடுகளிலும் அனைத்து கிராமங்களிலும் மழைநீர் சேமிப்புதொட்டி அமைத்து,  நிலத்தடிநீர் மட்டத்தை உயர்த்துவதன் மூலம் கால் நடைகளுக்கு தண்ணீர், விவசாய நீர்ப்பாசனத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைத்து வீடுகளிலும் குறைந்தது இரண்டு மரங்களாவது வளர்க்க வேண்டும். அன்றாட தேவைக்கு தண்ணீரை பயன்படுத் தும் போது சிக்கனமாக பயன்படுத்த வேண்டும். நீர் மேலாண்மை ஏற்படுத்துவதும் குடிநீரை மாசுபடா மல் பாதுகாப்பது நமதுகடமையாகும். எதிர் காலத்தில் தண்ணீரின் முக்கியத்துவத்தை கருதி இளைய தலை முறையினர் மரங்களை நட்டு மண்வளத்தை பாது காக்கவேண்டும் என கூட்டத்தில் வலியுறுத்தப்பட் டது. மேலும், மழைநீர் சேமிப்பு, நிலத்தடி நீர்மட்டம் மேம்பாடு குறித்து உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடை பெற்றது. இக்கூட்டத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர் ஆர்.ரவிச் சந்திரன், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவ லர் எம்.சுருளிநாதன், ஊராட்சி செயலாளர் தன்ராஜ்,  கிராம வறுமை ஒழிப்பு சங்க தலைவர் ஆனந்தி, செய லாளர் சுதா ஆகியோர் பேசினர்.இந்த விழிப்புணர்வு  கூட்டத்தில் விவசாய கூலித்தொழிலாளர்கள், விவ சாயிகள், மகளிர் சுய உதவிக்குழுக்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

;