மாவட்டங்கள்

img

தேசிய ஏரோபிக்ஸ் போட்டி பரணி வித்யாலயா பள்ளி சாம்பியன்

கரூர், டிச.8- 14-வது தேசிய ஏரோபிக்ஸ் போட்டி அண் மையில் தெலுங்கானா மாநிலத்தில் நடை பெற்றது. இதில் பல்வேறு மாநிலங்களிலி ருந்து மாணவர்கள் கலந்து கொண்டனர். அதில் தமிழகம் சார்பாக பரணி வித்யாலயா பள்ளி யைச் சேர்ந்த மாணவிகள் ஜஷ்மிதாஸ்ரீ, நிகா லினி, நித்யஸ்ரீ, ஸ்வேதா, நிஷிதா, சமிக்ஷா ஆகி யோர் பிட்நெஸ் ஏரோபிக்ஸ் குழு போட்டியில் கலந்து கொண்டு முதலிடம் பெற்று தங்கம் வென்றனர். மாணவிகள் நிஷிதா, நித்யஸ்ரீ, ஸ்வேதா ஆகியோர் ட்ரையோ ஸ்போர்ட்ஸ் ஏரோபிக்ஸ் மூன்று பேர் கொண்ட குழு போட்டியில் மூன் றாமிடம் பெற்று வெண்கலப் பதக்கம் வென்ற னர். தனி நபர் ஸ்போர்ட்ஸ் ஏரோபிக்ஸ் போட்டி யில் ஜஷ்மிதாஸ்ரீ மூன்றாமிடம் பெற்று வெண்கலப் பதக்கம் வென்றார். மேலும், சி.பி.எஸ்.இ பள்ளிகளுக்கு இடை யேயான தேசிய ஏரோபிக்ஸ் போட்டிகள் அண் மையில் மகாராஷ்டிரா மாநிலம் கோப்ரகானில் நடைபெற்றது. போட்டியில் தமிழகம் சார்பாக கலந்து கொண்ட கரூர் பரணி வித்யாலயா வைச் சேர்ந்த மாணவர் ஹேமந்த் தனி நபர் ஸ்போர்ட்ஸ் ஏரோபிக்ஸ் போட்டியில் ஏழாமிடம் பெற்றார். 11 வயது பிரிவு குழு போட்டியில் இனியா, ஜானுமயா, ஸ்ரீ தன்யா, ஜகானா, சமித்ரா, செல்சியா கேத்தரின், தீக்சிதா, பூர்வஸ்ரீ ஆகி யோர் ஏழாமிடம் பெற்று தேசிய அளவில் சிறந்த முதல் பத்து அணிகளுக்கான பரிசை வென்ற னர். 14 வயது குழு போட்டியில் ஜஷ்மிதாஸ்ரீ, நிகாலினி, நித்யஸ்ரீ, ஸ்வேதா, நிஷிதா, சமிக்ஷா மற்றும் 19 வயது குழு போட்டியில் ராஜேஸ்வரி, சஷ்டிகா, மதுமிதா, சுபிக்ஸா,  சுதர்சினி, தமிழினி, மோனிஷா, சுகிர்ஷா ஆகி யோர்  தேசிய அளவில் சிறந்த முதல் 15 அணி களுக்கான பரிசினை வென்றனர்.      ஏரோபிக்ஸ் போட்டியில் தேசிய சாம்பியன் பட்டம் மற்றும் பதக்கம் வென்று சிறப்பிடம் பெற்று சாதனை படைத்த மாணவியர் மற்றும் பயிற்சியாளர் சிவகாமி ஆகியோருக்கு பள்ளி யில் பாராட்டு விழா நடைபெற்றது. விழாவிற்கு பரணி பார்க் கல்விக்குழும தாளாளர் மோகனரெங்கன் தலைமை தாங்கி னார். செயலாளர் பத்மாவதி மோகனரெங்கன் முன்னிலை வகித்தார். பரணி பார்க் கல்விக் குழும முதன்மை முதல்வர் முனை வர் ராமசுப்பிரமணியன், பரணி வித்யாலயா பள்ளி முதல்வர் சுதாதேவி, துணை முதல்வர் பிரியா, இருபால் ஆசிரியர்கள் மற்றும் பெற் றோர்கள் பாராட்டி வாழ்த்தினர்.

;