மாவட்டங்கள்

img

கார்மல் பள்ளியின்  97ஆம் ஆண்டுவிழா

 நாகர்கோவில், ஆக.18- நாகர்கோவில் கார்மல் மேல்நிலைப்பள்ளியின் 97 ஆவது ஆண்டு விழா சனியன்று நடைபெற்றது. விழாவிற்கு கன்னியாகுமரி மாவட்ட குற்ற வழக்குத் துறை உதவி இயக்குநர் சேவியர் பாண்டியன் தலைமை வகித்தார். பள்ளி தாளாளர் சேவியர் ராஜ் வரவேற்றார். பள்ளியின் முன்னாள் மாணவர் ஜேக்கப்ராஜா, ஜோசப் ராஜ், உதயகுமார் ஆகியோர் பேசினர். பள்ளி தலைமை யாசிரியர் வில்சன் ஆண்டறிக்கை சமர்ப்பித்தார். விழாவில் பணிநிறைவு பெறும் ஆசிரியர்கள் சிறப்பிக்கப்பட்டனர். ஆசிரியர் அலுவலர் அருள்ராஜ் நன்றி கூறினார். ஆசி ரியர்கள் சுரேஷ் பாபுராஜன், பிரேம் தாஸ், ரசல் ராஜ் ஆகி யோர் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினர்.  இதில் பள்ளி மாணவர்கள்,ஆசிரியர்கள், பெற்றோர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

;