மாவட்டங்கள்

img

மத்திய - மாநில அரசுகளை கண்டித்து கருங்கல், தாணிவிளையில் சிபிஎம் ஆர்ப்பாட்டம்

நாகர்கோவில், ஆக.18-  மத்திய மாநில அரசுகளின் மக்கள் விரோத போக்கையும் தொழிலாளர் விரோத சட்டங்களையும்  கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறது. அதன் ஒருபகுதியாக கருங்கல் ஆட்டோ நிறுத்தம் முன்பு தர்ணா போராட்டம் நடைபெற்றது.  நாடு முழுவதும் வறுமையில் வாடும் கோடிக்கணக்கான ஏழைமக் கள் ரேசன் திட்டத்தில் மானிய விலை யில் வழங்கப்படும் உணவு பொருட் களை வாங்கி பயனடைந்து வருகின்ற னர். குறிப்பாக தமிழகத்தில் லட்சக்க ணக்கான மக்கள் ரேசன் கடைகளில் வழங்கப்படும் இலவச அரிசி, மானிய விலையில் வழங்கப்படும் உணவுப் பொருட்களை வாங்கி பயன்படுத்தி வருகின்றனர். மத்திய அரசு உணவு விநியோகத்துக்கும் மக்கள் நலத்திட் டங்களுக்கும் வழங்கப்படும் மானி யத்தை வெட்டிக் குறைக்கிறது. ஆனால் நாட்டில் உள்ள வளங்களை சூறை யாடி கொள்ளை லாபம் அடிக்கும் கார்ப்பரேட் பெரு முதலாளிகளுக்கு வரிச்சலுகை, வங்கி கடன் என மக்க ளின் வரிப் பணத்தை சலுகைகளாக வாரி இறைத்து வருகிறது. கோடிக்க ணக்கான மக்களுக்கு பயன்படும் உணவு விநியோகத்தை முடக்கும் வகையில் ரேசன் அட்டைகளுக்கு வழங்கப்படும் அரிசி , மண்ணெண் ணெய் உள்ளிட்ட பொருட்களின் அள வையும் படிப்படியாக குறைத்து வரு கிறது. மத்திய பாஜக அரசு தேசிய கல்விக்கொள்கை 2019 என்ற பெயரில் ஏழைகளின் கல்விக்கனவையும் சிதைக்க முயற்சித்து வருகிறது. மத்திய பாஜக அரசின் இந்த மக்கள் விரோத திட்டங்க ளுக்கு எந்த எதிர்ப்பும் தெரிவிக்காமல் மாநில அதிமுக அரசு பாஜகவின் கொத்தடிமை போன்று செயல்பட்டு வருவதாக அரசியல் கட்சியினரும் பொதுமக்களும் குற்றம்சாட்டி வரு கின்றனர். இந்நிலையில் மத்திய மாநில அரசு களின் மக்கள் விரோத போக்கையும் தொழிலாளர் விரோத சட்டங்களையும்  கண்டித்து நடந்த போராட்டத்திற்கு கருங்கல் வட்டார செயலாளர் எம்.ஏ. சாந்தகுமார் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் ஆர்.செல்ல சுவாமி, செயற்குழு உறுப்பினர் என்.முருகேசன் உள்ளிட்டோர் பேசினர்.  இதுபோல தாணிவிளை ரேஷன் கடை முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத் திற்கு அருவிக்கரை கிளை செயலா ளர் சி.வர்க்கீஸ் தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம். அண்ணாதுரை, மாவட்டக்குழு உறுப்பி னர்கள் ஆர்.ரவி, சகாய ஆன்றணி, வட்டார செயலாளர் ஆர்.வில்சன் ஆகி யோர் பேசினர். இதில் கிளை செயலா ளர்கள் உட்பட பலர் கலந்து கொண்ட னர்.

;