மாவட்டங்கள்

img

பேராசிரியரின் சாதனை பயணம்!

சிதம்பரம், மே 3-தனி மனிதராக ஒரே நாட்டிற் குள் 25 ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்தை கடந்து கின்னஸ் சாதனை புரிவதற்கான தனது பயணத்தை அண்ணாமலை பல்கலைகழகத்தின் பேராசிரியர் செல்வக்குமார் தொடங்கினார். சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் பேராசிரியராக பணியாற்றி வருபவர் முனைவர் செல்வக்குமார். இவர் இருச்சக்கர வாகனத்தில் தனியாக 150 நாட்களில் 25 ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்தை கடந்து கின்னஸ் சாதனை படைப்பதற் கான பயணத்தை தொடங்கினர்.இந்த பயணத்தின் போது அவர் 29 மாநிலங்களை கடக்க உள்ளார். இவரது பயணத்தை அண்ணாமலைப் பல்கலைக்கழகத் துணை வேந்தர் பேராசிரியர் முருகேசன் கொடியசைத்து துவக்கி வைத்தார்.அப்போது மாணவர்களும், உறவினகர்ளும் உடன் இருந்தனர். இந்த பயணத்தின் போது பிரதமரையும், குடியரசுத் தலைவரையும் சந்திக்க முயற்சி செய்ய உள்ளதாக செல்வக்குமார் தெரிவித்துள்ளார்.

;