மாவட்டங்கள்

img

சமூகக் கொடுமைகள் இல்லாத புதிய இந்தியாவுக்காக சிஐடியு போராடுகிறது

திருப்பூர், ஜூலை 2 -  சமூகக் கொடுமைகள் இல் லாத மனிதத்தைக் காக்கும் புதிய இந்தியாவுக்காக சிஐடியு போராடி வருகிறது என்று சிஐடியு அகில இந்தியத் துணைத் தலைவர் ஏ.கே.பத்மநாபன் கூறினார். சிஐடியு திருப்பூர் மாவட்ட மாநாட்டின் நிறைவாக ஊத்துக் குளி நகரில் தியாகி அசோக் நினை வுத் திடலில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் ஏ.கே.பத்மநாபன் சிறப்புரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது: சம்பளம், உரிமை, ஜனநாயகம் காக்க தொழிற்சங்க இயக்கம் போராடி வருகிறது. தற்போது நடக்கும் சம்பவங்கள் நாம் 14, 15ஆம் நூற்றாண்டில் வாழ்கிறோமா என்ற கேள்வியை எழுப்புகிறது. நெல்லையில் சாதிவெறியர்க ளால் அசோக் படுகொலை, மேட் டுப்பாளையத்தில் கனகராஜ், வர்ஷினி படுகொலை எல்லாம் நாம் எங்கே வாழ்ந்து கொண்டி ருக்கிறோம் என்ற கேள்வியை இந்த 21ஆம் நூற்றாண்டில் யாரி டம் கேட்பது? இளம் உயிர்களின் விருப்பத்தை அங்கீகரிக்க வேண் டும் என்பதே எங்கள் நிலைபாடு. ஆனால் அதைக் குற்றம் என்று  காரணம் சொல்லி வெட்டுகிறார் கள் என்றால், எங்கள் தோழர் அசோக் என்ன குற்றம் செய்தார்? அவரை கோரமாக படுகொலை செய்தது ஏன்? அவர் வாலிபர் சங் கத்தைச் சேர்ந்தவராக, கம்யூ னிஸ்ட்டாக பள்ளி, கல்லூரிகளில் படித்தது போக புத்தகங்களை வாங்கிப் படித்து, இரவு நேரம் வேலைக்குச் சென்றுவிட்டு பகலில் மக்கள் பணியாற்றினார்.  தருமபுரி, மதுரை, நெல்லை, கோவை என எங்கும் நடைபெறும் சமூகக் கொடுமைகளுக்கு முற் றுப்புள்ளி வைக்காவிட்டால், தீண்டாமைக் கொடுஞ்செயல் என பாடப்புத்தகத்தில் எழுதி வைத்துவிட்டு, கொடுமைகளைக் கண்டுகொள்ளாமல் இருந்தால் என்ன பயன்? இதை பெரியார் மண் என்று சொல்லிவிட்டு, இந்த கொடுமைகள் நடக்கும்போது கொதித்தெழ வேண்டிய தமிழகம் சிலரின் ஆர்ப்பாட்டத்தோடு முடி கிறது என்றால் வேதனையாக இருக்கிறது. சாதி, மொழி, பிரதேச வேறு பாடுகள் இல்லாமல் அனைத்துத் தொழிலாளர்களையும் ஒன்றி ணைத்து புதிய இந்தியாவை உருவாக்க சிஐடியு போராடுகிறது. இங்கே நடைபெற்ற சிஐடியு மாநாட்டில் வட மாநிலத் தொழி லாளியின் பிரதிநிதி பங்கேற்று, காவல்துறைகூட எங்களைக் குற்றவாளியாகப் பார்க்கிறது, இந்த கொடுமைக்கு முடிவு கட் டத்தான் நான் சிஐடியுவிற்கு வந்தேன் என்று தெரிவித்தார். அதேபோல் தில்லி, உ.பி., என  பல மாநிலங்களில் தமிழ் தொழிலா ளர்கள் வேலை செய்கின்றனர். அங்கே அவர்களுக்கு பாதுகாப் புக்குக் குரல் கொடுப்பதும் சிஐடியு தான். அதுதான் தோழமை, அது தான் மனிதம். அந்த கட்டத்துக்கு அனைவரையும் உயர்த்தும் கடமையைத்தான் சிஐடியு செய்கிறது. பிரான்ஸின் பாரீஸ் நகரத்தில் தொடர்ந்து 38 வாரங்களாக சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் மஞ்சள் ஆடை (எல்லோ வெஸ்ட்) என்ற இயக்கம் அநீதிக்கு எதிராக, பொருளாதார ஏற்றத்தாழ்வுக்கு எதிராக நடைபெற்று வருகிறது. மக்கள் விரோத கொள்கைகள் மாற வேண்டும் என்று போராடு கிறார்கள். சிஐடியு 16ஆவது மாநில மாநாடு செப்டம்பரில் காஞ்சி புரத்தில் நடைபெறுகிறது. காஞ் சிபுரம் என்றால் பலருக்கு கோயில் கள் நினைவுக்கு வரும். ஆனால் இன்று அந்த காஞ்சிபுரம் நவீன தொழிலாளர்களின், நவீன  தொழில்நுட்பம் படித்த இளை ஞர்களின் போராட்டக் களமாக மாறி இருக்கிறது. சமத்துவ புதிய இந்தியாவை உருவாக்க ஒன்றுபட்டு, போராட்ட உணர்வை பெற்று, மென்மேலும் முன்னேறுவோம். இவ்வாறு ஏ.கே.பத்மநாபன் கூறினார்.

;