திங்கள், ஆகஸ்ட் 3, 2020

மாவட்டங்கள்

நீரில் மூழ்கி முதியவர் சாவு - காவல் துறையினர் விசாரணை

அவிநாசி ஜூலை 6- அவிநாசி அருகே போலநாயக்கன்பாளையத்தில் நீரில் மூழ்கி முதியவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டம், சேவூர் அருகே உள்ள போல நாயக்கன்பாளையம் செல்லும் வழியில் ஓடையில் ஞாயி றன்று ஆண் சடலம் கிடப்பதாக அப்பகுதி பொதுமக்கள் சேவூர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

இத் தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையி னர் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதைத்தொடர்ந்து முதியவர் கிளாகுளம் ஆதிதிராவிடர் காலனியைச் சேர்ந்த குமரன் (52) என்றும், இவருக்கு கண்பார்வையில் குறைபாடு உள்ளதாகவும் தெரிய வந்தது.

மேலும், இவர் சனியன்று பாப்பாங்குளம் எம். ஜி.ஆர் நகரில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு செல்கை யில், போலநாயக்கன்பாளையம் ஓடையில் தவறி விழுந்து இறந்திருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. இதைய டுத்து சேவூர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து மேற்கொண்டு  விசாரணையை நடத்தி வருகின்றனர்.

;