திங்கள், ஆகஸ்ட் 3, 2020

மாவட்டங்கள்

அவிநாசியில் தொடர் மழை: விவசாயிகள் மகிழ்ச்சி

அவிநாசி, ஜூலை 4- அவிநாசி அருகே  சேவூர் சுற்று வட்டாரப் பகுதிகளில்  தொடர் மழையால் நிலக்கடலை பயிரிட்டுள்ள விவசாயி கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

அவிநாசி ஒன்றியம், சேவூர் மற்றும் சுற்றுவட்டார பகுதி களான ஆலத்தூர், பொங்கலூர், கானூர், மங்கரசு, வலைய பாளையம், முறியாண்டம்பாளையம், போத்தம்பாளையம், பாப்பாங்குளம், புஞ்சை தாமரைக்குளம், வடுகபாளையம், வேட்டுவபாளையம், தண்டுக்காரன்பாளையம் உட்பட பல கிராமப் பகுதிகளில்  தொடர்ச்சியாக கனமழை பெய்து வருகி றது.  

இதனால் நிலக்கடலை பயிரிட்ட பகுதிகளில் நிலக்க டலை செடிகள் விழுது (வேர்கள்) இறங்கி காய் பிடிக்கத் துவங்கியுள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந் துள்ளனர்.

மேலும், தொடர்ந்து மழை பெய்தால் நிலக்க டலை நல்ல விளைச்சலைக் கொடுக்கும் எனவும் சென்ற ஆண்டை விட இந்தாண்டு நிலக்கடலை விளைச்சல் அதி கம் இருக்கும் எனவும் அவர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்ற னர்.

;