மாநிலங்கள்

img

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் பாதுகாப்பு வாகனம் மோதியதில் சிறுவன் பலி


ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்தின் பாதுகாப்பு வாகனம் மோதி விபத்துக்குள்ளானதில் 6t வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் ஆல்வார் மாவட்டம் திஜாராவில் ககன் கார் கிராமத்தில் உள்ள பாபா கமல்நாத்தை சந்திக்க ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் சென்றிருந்தார். நிகழ்ச்சி முடிந்து மோகன் பகவத்  ஆல்வார் நகருக்கு திரும்பினார். 
மோகன் பகவத்துக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டு இருப்பதால், அவரின் வாகனத்தின் முன்னும், பின்னும் பாதுகாப்பு வாகனங்கள் 10-க்கும் மேற்பட்டவை அணிவகுத்துச் சென்றன.
அப்போது சாலை ஓரமாக இருசக்கர வாகனத்தில் சென்ற முதியவர் மீது பாதுகாப்பு வாகனங்களில் ஒன்று மோதியது. இதனால் இருசக்கர வாகனத்தில் சென்ற முதியவரும், அதில் பின் இருக்கையில் இருந்த 6 வயது சிறுவனும் தூக்கி வீசப்பட்டனர்.  இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே சிறுவன் பலியானார். காயம் அடைந்த முதியவர் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளர். 
இச்சம்பவம் குறித்து மாண்டவார் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
 

;