மாநிலங்கள்

img

துர்கா சிலையை கரைக்க சென்ற 10 பேர் நீரில் மூழ்கிபலி

ராஜஸ்தானில் துர்கா சிலையை கரைக்கச் சென்ற 10 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 
ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி பண்டிகை கொண்டாட்டங்கள் நேற்றுடன் நிறைவடைந்தன. இந்நிலையில் ராஜஸ்தான் மாநிலம் டோல்பூரில் துர்கா சிலையை கரைக்கும் நிகழ்ச்சி நேற்று மாலை நடைபெற்றது. துர்கா சிலையை பார்பதி நதியில் கரைத்தபோது, ஒரு சிறுவன் குளிப்பதற்காக ஆற்றில் குதித்துள்ளான். ஆனால் அவனால் நீந்தி கரையேற முடியாமல் ஆற்றில் மூழ்கினான். அவனை மீட்க மேலும் சிலர் குதித்துள்ளனர். ஆனால் அவர்களும் நீரில் மூழ்கி உள்ளனர்.
இதுபற்றி தகவல் அறிந்த பேரிடர் மீட்புக்குழுவினர், ஆற்றில் மூழ்கியவர்களை தேடும் பணியில் ஈடுபட்டனர். இன்று காலை நிலவரப்படி 10 பேர் சடலங்களை மீட்டுள்ளனர்.   மேலும் சிலரைக் காணவில்லை. அவர்களைத் தேடி பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. காணாமல் போனவர்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாக மாவட்ட ஆட்சியர் ஜெய்ஸ்வால் தெரிவித்தார். 
மேலும் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு முதலமைச்சரின் நிவாரண நிதியில் இருந்து தலா ஒரு லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்றும் அவர் கூறினார். 
 

;