திங்கள், ஆகஸ்ட் 10, 2020

மாநிலங்கள்

img

தேர்தல் தோல்வியால் மம்தா பானர்ஜி நாடகம்

கொல்கத்தா:
மேற்குவங்க மாநிலத்தில், அரசின் திட்ட உதவிகளைப் பெற விரும்பும் மக்களிடமிருந்து ஒரு குறிப்பிட்டதொகையை, (cut money) திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் லஞ்சமாக பெற்று வந்தனர். இதற்கு எதிராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தியும் அதனை மம்தா கண்டு கொள்ளவில்லை.

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில், திரிணாமுல் காங்கிரஸ் அடைந்த தோல்விக்கு இவ்வாறு வாங்கப்பட்ட பணமும் ஒரு காரணம் என்று தற்போது பேச்சுஎழுந்துள்ளது.இந்நிலையில், திரிணாமுல் காங்கிரஸ்காரர்கள் மக்களிடமிருந்து பெற்ற லஞ்சப்பணத்தை திருப்பிக் கொடுத்துவிடுமாறு, அக்கட்சியின் தலைவரும் முதல்வருமான மம்தா பானர்ஜி அண்மையில் ரகசிய உத்தரவு ஒன்றை.கட்சியினருக்குப் பிறப்பித்துள்ளார். மம்தாவின் இந்த உத்தரவின்படி, திரிலோசன் முகர்ஜிஎன்பவர், பொதுமக்களிடம் இருந்து பெற்ற ரூ. 2 லட்சத்து 25 ஆயிரம் லஞ்சப் பணத்தை அவர்களிடமே திருப்பிக் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. மம்தா உத்தரவு பிறப்பித்த 4 நாட்களில், லஞ்சப் பணத்தை உரியவர்களிடம் திருப்பி அளித்துள்ளார். பாதாளச் சாக்கடையைச் சரிசெய்வதற்காக, தலா ரூ. 1600 விகிதம், 141 பேரிடம், திரிலோசன் முகர்ஜி லஞ்சம் பெற்றுள்ளார். அதையே தற்போது திருப்பிக் கொடுத் துள்ளார்.

;