மாநிலங்கள்

img

மகாராஷ்டிராவில் 3  ஆண்டில்  12 ஆயிரம் விவசாயிகள் தற்கொலை

மும்பை:                                                                                                                                                                                                                                                                                                                                                                                         மகாராஷ்டிர மாநில பாஜக ஆட்சியில், கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் 12 ஆயிரத்து21 விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டு, இறந்துள்ளதாக புள்ளிவிவரங்கள் வெளியாகியுள்ளன.மகாராஷ்டிர மாநிலத்தின், நிவாரண மற்றும் புனர்வாழ்வு அமைச்சர் சுபாஷ் தேஷ்முக்,அம்மாநில சட்டமன்றத்தில் எழுத்துப் பூர்வமாக தாக்கல் அறிக்கையில்தான் இந்த விவரம் குறிப்பிடப்பட்டு உள்ளது.

“மகாராஷ்டிராவில் 2015 முதல் 2018 வரை மூன்று ஆண்டுகளில் 12 ஆயிரத்து 21 விவசாயிகள் இறந்துள்ளனர். இவை குறித்து,6 ஆயிரத்து 888 தற்கொலை வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன. இவர்களில் 6 ஆயிரத்து845 விவசாயிகளின் குடும்ப உறுப்பினர்களுக்குதலா ரூ. 1 லட்சம் நிவாரண நிதி வழங்கபட்டுள்ளது. 2019-ஆம் ஆண்டு ஜனவரி முதல் மார்ச்மாதங்களுக்கு இடையே மட்டும் 610 விவசா
யிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இதில் 192 வழக்குகள் நிதி உதவிக்கு தகுதியானவையாக வரையறுக்கப்பட்டு, 182 விவசாயிகளின் உறவினர்களுக்கு நிதி இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது” என்று தேஷ்முக் கூறியுள்ளார்.

;