மாநிலங்கள்

img

பசுவால் தலைகீழாக கவிழ்ந்த பகவத் பாதுகாப்பு வாகனம்

மகாராஷ்டிரா:

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்தின், பாதுகாப்பு வாகனம் தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளாகி உள்ளது.


மகாராஷ்டிராவுக்கு சென்றுள்ள மோகன் பகவத், வியாழக்கிழமையன்று மாலை 5.15 மணியளவில் தனது ‘இசட்பிளஸ்’ பாதுகாப்பு வாகன அணிவகுப்புடன் நாக்பூருக்கு சென்றுகொண்டு இருந்துள்ளார். 


அப்போது திடீரென பசுமாடு ஒன்று சாலையின் குறுக்கே வந்ததால், பகவத்தின் பாதுகாப்புக்கு வந்த வாகனத்தின் ஓட்டுநர் நிலைதடுமாறியுள்ளார். இதனால் அவர் ஓட்டிவந்த வாகனம், கட்டுப்பாட்டை மீறி, சாலையில் ஓரத்தில் இறங்கி, தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்கு உள்ளாகியுள்ளது.


வாகனத்தில் மொத்தம் 6 சிஆர்பிஎப் வீரர்கள் பயணித்துள்ளனர். அவர்களில் ஒருவர் காயமடைந்துள்ளார். மற்றவர்கள் காயமின்றி தப்பியுள்ளனர். காயமடைந்த சிஆர்பிஎப் வீரர், நாக்பூரிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். விபத்து நடப்பதற்கு முன்னரே மோகன் பகவத் அந்த இடத்தை விட்டு சென்று விட்டதால் அவருக்கு எந்த பாதிப்பு இல்லை என ஆர்.எஸ்.எஸ் தலைவர்கள் கூறியுள்ளனர்.

;