மாநிலங்கள்

img

தாய்க்கு கடன் தர மறுத்த ஆசிரியரை கொலை செய்த சிறுவன்

மகாராஷ்டிராவில் தாய்க்கு கடன் தர மறுத்த டியூசன் ஆசிரியரை மாணவர் கொலை செய்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

மகாராஷ்டிர மாநிலம் மும்பை புறநகர் பகுதியான கோவந்தியில் உள்ள சிவாஜிநகர் என்ற பகுமிதயில் 30 வயதான ஆயிஷா அஸ்லம் என்பவர் டியூஷன் நடத்தி வருகிறார். 
அவரிடம் டியூஷன் படிக்கும் சிறுவனின் தாயார் கடன் கேட்டுள்ளார். ஆனால் ஆசிரியர் கடன்தர மறுப்பு தெரிவித்திருக்கிறார். இதையடுத்து இரு பெண்களுக்கும் இடையே  வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து ஆசிரியர் வீட்டில் இருந்த போது சிறுவன், கத்தியால்  குத்தியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த ஆசிரியர்  மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். 
COMMENT
அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று அவரது உயிர் சிகிச்சை பலனின்றி பிரிந்தது. இந்நிலையில் சிறுவனை கைது செய்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
 

;