மாநிலங்கள்

img

நித்தியானந்தா ஆசிரமத்தில் சிறுவர், சிறுமிகள் துன்புறுத்தல் - முன்னாள் சிஷ்யை

நித்தியானந்தாவின் ஆசிரமத்தில் சிறுவர், சிறுமிகள் துன்புறுத்தப்படுவதாக சாரா ஸ்டீபனி லாண்டரி தெரிவித்துள்ளார்.

நித்தியானந்தாவின் ஆசிரமத்தில் முன்னாள் சிஷ்யையாக பணியாற்றி வந்தவர் சாரா ஸ்டீபனி லாண்டரி. தற்போது ஆசிரமத்திலிருந்து வெளிவந்து கனடாவில் வசித்து வருகிறார். இந்நிலையில் சாரா யூடியூப்பில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறியதாவது, ஆசிரமத்தில் சிறுவர், சிறுமிகள் அடிக்கப்படுவதாக கூறி பதிவிட்டுள்ளார். மேலும் அப்பதிவில்,  ஒருநாள் அதிகாலையில் அழுதுகொண்டிருந்த சிறுமியிடம் விசாரித்தபோது அற்புத ஆற்றல்களை வெளிப்படுத்தும்படி துன்புறுத்தப்படுவதாக கூறினார். மேலும் காலையில் இயற்கை உபாதைகளை கூட கழிக்க விடாமல் துன்புறுத்தப்படவதாகவும் சாரா வீடியோவில் கூறியுள்ளார்.


 

;