மாநிலங்கள்

மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வில் 10 சதவீத இடஒதுக்கீடு மத்திய அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

புதுதில்லி,மே 16-மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வில் 10 சதவீதம் இடஒதுக்கீடு குறித்து பதிலளிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பொதுப் பிரிவில் பொருளாதாரத்தில் பின்தங்கி யவர்களுக்கு கல்வி மற்றும் அரசு வேலைவாய்ப்பில் 10 சதவீதம் இடஒதுக்கீடு அளிக்கும் வகையில் அரசி யலமைப்புச் சட்ட விதிகள் 15 மற்றும் 16-இல் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டது. இந்த சட்டத்தின்படி, இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று அனைத்து அரசு கல்வி நிறு வனங்கள், அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள் மற்றும் பொதுத் துறை நிறுவனங்களுக்கு மத்திய அரசு உத்தரவுபிறப்பித்தது. இந்நிலையில், மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வுகுறித்த அறிவிப்பை சிபிஎஸ்இ கடந்த ஜனவரி மாதம் வெளியிட்டது. அதில், பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவில் உள்ளஆசிரியர்களுக்கு 10 சதவீதம் இட ஒதுக்கீடு கிடைக்க வில்லை என்று புகார் எழுந்தது. இது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் வியாழனன்று விசாரணைக்கு வந்தது. அப்போது இதுதொடர்பாக மத்திய அரசு மற்றும் சிபிஎஸ்இ பதிலளிக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்தவழக்கின் விசாரணை ஜூலை 1 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. 

;