மாநிலங்கள்

img

கோவிட்-19: புதுச்சேரியில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 49 ஆக உயர்வு

புதுச்சேரியில் கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 49 ஆக உயர்ந்துள்ளது.

புதுச்சேரியில் கடந்த ஒரு வாரமாக, கோவிட்-19 வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது. இன்று நிலவரப்படி, மேலும் 2 பேருக்கு புதிதாக நோய் தொற்று இருப்பது  உறுதியாகியுள்ளது. இதனால் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில், பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 49 ஆக உயர்ந்துள்ளது. தற்போது, 27 பேர் புதுச்சேரி இந்திரா காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 14 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இந்த நிலையில் புதுச்சேரி கோவிட்-19 வைரஸ் சமூக பரவலாக மாற தொடங்கிவிட்டதாக அச்சம் எழுந்துள்ளது என சுகாதாரத்துறை இயக்குநர் மோகன் குமார் கூறியுள்ளார். மக்கள் எச்சரிக்கையுடன் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

;